பெரம்பலூர் மாவட்டத்தில் தேங்காய் போ பறிக்கும் போது மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயபால். இவர் தனது மாமனார் வீட்டிற்கு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அடைக்கம்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் தேங்காய் பறிப்பதற்காக கம்பு எடுத்து அடித்துள்ளார். அப்பொழுது கம்பியில் அருகில் இருந்த மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக உரசியதில் மின்சாரம் பாய்ந்து ஜெயபால் கீழே விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் ஜெயபாலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஜெயபால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாடாலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.