இந்திய ரிசர்வ் வங்கி மாஸ்டர் கார்டுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தடை விதித்து இருந்த நிலையில் தற்போது அந்த தடை விலக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல் சேமிப்பு விதிமுறைகளுக்கு மாஸ்டர் கார்டு நிறுவனம் இணங்கவில்லை என்பதால் மாஸ்டர்கார்டு நிறுவனம் இந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் புதிய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு தரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
மாஸ்டர்கார்டு
இந்த நிலையில் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், மாஸ்டர்கார்டு ஆசிய, பசிபிக் லிமிட் ரிசர்வ் வங்கியின் விதிகளை முழுமையாக கடைபிடித்து வருவதால் திருப்தி அடைகிறோம். மாஸ்டர் கார்டு வாடிக்கையாளர்கள் நிதி பரிமாற்ற தரவுகள், விவரங்கள் பாதுகாப்பது முழுமையாக ரிசர்வ் வங்கி விதியின் கீழ் உள்ளது. எனவே 2021ஆம் ஆண்டு ஜூலை 14ம் தேதிவிதிக்கப்பட்ட தடையை விலக்குகிறோம். இனி மாஸ்டர் கார்டு புதிய வாடிக்கையாளர்களை மாஸ்டர்கார்டு சேர்த்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
நன்றி
‘இந்திய ரிசர்வ் வங்கி தடை விலக்கியது எங்களுக்கு மகிழ்ச்சி என்றும், தடையை விலக்கியதற்கு நன்றி என்றும், இந்தியாவின் டிஜிட்டல் தேவை, மக்களின் வர்த்தகத்தின் தேவை கருதி, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
மேலும் எங்களின் இலக்குகளை அடைந்திருக்கிறோம் என்றும், எதிர்காலத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுவோம் என்றும் கூறியுள்ளது. இந்தியா எங்களுக்கு முக்கியமான சந்தை என்றும், எங்களது புதிய திட்டங்கள் எப்போதும் இந்தியர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும், புதிய மதிப்பு மிக்க வாடிக்கையாளர்கள் எங்களுக்கு கிடைப்பார்கள் எனவும் தெரிவி்த்தது.
வங்கிகள்
இந்த தடை விலக்கத்தால் மாஸ்டர்கார்டுகளை மட்டுமே வழங்கி வந்த யெஸ்வங்கி, ஆர்பிஎல் வங்கி ஆகியவை இனி புதிய கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். அதேபோல் சிட்டி வங்கியும் மாஸ்டர்கார்டுகளை அதிகம் வழங்கி வந்ததால் இந்த தடை விலக்கத்தால் அந்த வங்கிகள் பயன்பெறும்.
RBI allows Mastercard after a Eleven months
RBI allows Mastercard after a Eleven months | மாஸ்டர்கார்டுக்கு ஒரு நல்ல செய்தி: ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு