‛மாஸ்டர் கார்டு தடை நீக்கம்| Dinamalar

பெங்களூரு-வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை விபரங்களை பராமரிக்காததால், ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தின் ‘டெபிட், கிரெடிட் கார்டு’ சேவைக்கு கடந்த ஆண்டு ஜூலையில் ரிசர்வ் வங்கி தடை விதித்தது.

ஆனால், ‘இந்நிறுவனத்தின் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க முடியாது’ என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றுவதாக அந்நிறுவனம் ஒப்புக் கொண்டதால், மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவைக்கு விதித்திருந்த தடையை ரிசர்வ் வங்கி நேற்று நீக்கியது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.