அமெரிக்காவின் முன்னணி அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Revlon திவாலானதாக அறிவித்துச் சேப்டர் 11 அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஆர்வமாக இருக்கும் முகேஷ் அம்பானி பிரிட்டனில் Boots நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது அமெரிக்காவில் திவாலான அழகுசாதன பொருட்கள் நிறுவனமான Revlon-ஐ வாங்க திட்டமிடுவதாகத் தெரிகிறது.
முகேஷ் அம்பானியும் சந்திரசேகரனும் இனி பக்கத்து வீட்டுக்காரர்கள்! புதிய வீட்டின் விலை என்ன தெரியுமா?!
Revlon நிறுவனம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 1932 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Revlon லிப்ஸ்டிக், நெயில்பாலிஷ் விற்பனையில் முன்னோடியாக இருந்ததது. 1955 ஆம் ஆண்டில் இருந்து உலக நாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வந்த நிலையில் தற்போது சுமார் 150 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
பிரபலம்
2018 ஆண்டிலிருந்து இந்நிறுவனத்தின் தலைவர் பெரல்மேனின் மகள் டெப்ரா பெரல்மேனால் Revlon நிறுவனத்தை நடத்தி வருகிறார். Revlon நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பிரபல ஹாலிவுட் நடிகை பிரிட்னி ஸ்பியர்ஸ், கிறிஸ்டினா உள்படப் பலர் பயன்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குகள் வீழ்ச்சி
Revlon பங்குகள் கடந்த வார வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 52.76 சதவீதம் வரையில் சரிந்து வெறும் 2.05 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. 2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 82.42 சதவீதம் சரிந்து இருந்தது.
80 சதவீதம் உயர்வு
ஆனால் இன்று திவாலானதாக அறிவிக்கப்பட்டு முகேஷ் அம்பானி வாங்குகிறார் எனச் செய்திகள் பரந்த உடன் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் Revlon பங்குகள் 80 சதவீதம் உயர்ந்து 3.50 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
3.31 பில்லியன் டாலர் கடன்
Revlon நிறுவனம் சுமார் 3.31 பில்லியன் டாலர் அளவிலான நீண்ட காலக் கடன்களை வைத்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கை முறைக்குத் திரும்பி வரும் நிலையிலும், டிஜிட்டல் மற்றும் தற்போதைய சந்தைக்குத் தேவையான பொருட்கள் இல்லாத காரணத்தால் வர்த்தகத்தை இழந்தது.
ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி கையில் ரிலையன்ஸ்.. அப்போ முகேஷ் அம்பானி..?
Bankrupt Revlon shares up 80 percent after Mukesh Ambani considers buying
Bankrupt Revlon shares up 80 percent after Mukesh Ambani considers buying முகேஷ் அம்பானி பவர்.. திவாலான Revlon பங்குகள் 80% உயர்வு..!