தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஜூன் 16-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம்… விட்டுக்கொடுக்கப் போவது பன்னீரா? எடப்பாடியா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
வெற்றியூர் மணி
அதிமுக தொண்டர்கள்தான் கட்சி. மாவட்ட செயலாளர்கள் கட்சி அல்ல அதை அறிந்தவர் பன்னீர்செல்வம் விட்டு கொடுத்து போவது பன்னீர்செல்வம் அவர்களுக்கு புதிதல்ல
Stallion Tamizh
விட்டுக் கொடுக்கப் போவது தொண்டர்களே…அதிமுக என்ற கட்சி தோன்றியதன் அடிப்படை ஆதாரம், அச்சாணியே போராசை, பச்சை துரோகம், வெறுப்பு மற்றும் கோபம் தான்.
கலைஞர் <->MGR, ஜானகி<->ஜெயா, ஜெயா<->சசி, சசி<->பன்னீர்,சசி<->எடப்பாடி. எடப்பாடி <->பன்னீர்.. கர்மா சுற்றி சுற்றி வருகிறது.
Rainbow Times
அதிமுகவில்,ஓபிஎஸ் மிக வலுவான தலைவர்! அதிமுகவிற்கு இது சோதனையான காலம்! எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஐந்தாண்டுகளைப் பூர்த்தி செய்த பெருமைக்குரியவர்! இருவரும் தனித்தனியான திறமை உள்ளவர்கள்தான்! இருப்பினும், கட்சியின் தனித்துவத்திற்கு ஒரே தலைமைதான் தேவை! செங்கோட்டையன் தலைவராக வேண்டும்!
G.Sundararajah
முதலில் போகப் போவது இரட்டை இலை சின்னம்! BJP அதிமுகவை விழுங்க போகிறது!!
Safi Ahamed
இபிஎஸ் ஓபிஸ்க்கு என்ன வேலை தெரியுமா….கூடவே இருந்து தொண்டர்களையும் தலைவர்கள் ஒவ்வொருவரையும் பாஜகவில் சேர்த்து விடுவதுதான்… இறுதியாக இருவரும் பாஜகவில் சரணாகதி ஆகவேண்டும்… இதுவே ஆபரேஷன் ஆப் ஆதிமுபாஜக..
இதையும் படிங்க… FACT CHECK : ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட் பெற மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகையா?
Nellai D Muthuselvam
விட்டு கொடுக்க வேண்டிய நபரும் , தலைமையில் அமர வேண்டிய நபரும் ஓ.பன்னீர் செல்வம் தான்.எப்போது தொண்டர்களால் கட்சி நடத்த ஆரம்பித்து விட்டதோ அப்போதே கட்சி வேறு ஆட்சி வேறு என்று நினைக்க துவங்க வேண்டும்.கட்சிக்கு ஓபிஎஸ் செயல் தலைவராக வேண்டும். அஇஅதிமுகவின் தேசிய முகமாக ஓபிஎஸ் மாற வேண்டும். நாடாளுமன்ற அரசியலுக்கு நுழைய வேண்டும்.அஇஅதிமுக தலைவர், பொதுசெயலாளர் பதவிகள் மீண்டும் நிரப்பப்பட்டால் அஇஅதிமுக தொண்டர்கள் உற்சாகமாக அடைவார்கள்.விட்டு கொடுத்து பதவிகளில் அமர வேண்டும் . இல்லையென்றால் இரு பதவிகளுக்கும் உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும்.
இன்றைக்கான லைக் டிஸ்லைக் கேள்வி, இன்று இரவு 7 மணிக்கு புதிய தலைமுறையின் சமூகவலைதள பக்கங்களில் வெளியாகும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM