முதலீட்டாளர்களின் பணம் ரூ.117 கோடி மோசடி: பிரபல நிறுவனத்தின் CFO கைது!

முதலீட்டாளர்களின் பணத்தை 117 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வேளாண் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகச் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக சுமையா இண்டஸ்ட்ரீஸ் (Suumaya Industries) என்ற நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்தவர் தவானி பரேஷ் தத்தானி.

28 வயதான தவானி பரேஷ் தத்தானி கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி சுமையா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பதவி ஏற்றார்.

குட் நியூஸ்.. 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பு அதிகம்.. !

தவானி பரேஷ் தத்தானி

இந்த நிலையில் சுமையா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி தவானி பரேஷ் தத்தானி அதிக வருமானம் தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூபாய் 117 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தெரிகிறது

பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரிகள்

பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரிகள்

இது குறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில் தவானி பரேஷ் தத்தானி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

கைது செய்யப்பட்ட தவானி பரேஷ் தத்தானியிடம் பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரிகள் மேலும் தீவிர விசாரணை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது

சார்ட்டட் அக்கவுண்டண்ட்
 

சார்ட்டட் அக்கவுண்டண்ட்

தவானி தத்தானி மும்பையைச் சேர்ந்த சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஆவார். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

ஆலோசனை

ஆலோசனை

தவானி பரேஷ் தத்தானி ஒழுங்குமுறை இணக்கம் (FEMA, வருமான வரி போன்றவை) முதல் நிதி திரட்டுதல் மற்றும் முதலீட்டு வங்கி பரிவர்த்தனைகள், முதலீட்டாளர் பகுப்பாய்வாளர்களுடன் தொடர்புகொள்வதற்கு கார்ப்பரேட்டுகளுக்கு ஆலோசனை கூறி வரும் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.

அனுபவம்

அனுபவம்

மேலும் கடன் மற்றும் சமபங்கு வளங்கள் மூலம் நிதியை ஏற்பாடு செய்தல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக ஈக்விட்டி பங்குகள் மற்றும் ESOPகளின் மதிப்பீட்டில் இவருக்கு அனுபவம் உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தவானி பரேஷ் தத்தானி சுமையா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடன் மற்றும் நிதித் தலைவராக பணிபுரிந்த நிலையில் தான் அவர் மீது ரூ.117 கோடி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

CFO of agricultural company arrested: Rs.117 crore cheating case

CFO of agricultural company arrested: Rs.117 crore cheating case | முதலீட்டாளர்களின் பணம் ரூ.117 கோடி மோசடி: பிரபல நிறுவனத்தின் CFO கைது

Story first published: Friday, June 17, 2022, 14:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.