வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர் வீட்டில் சி.பி.ஐ., நடத்திய சோதனைக்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குறைந்த விலை
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசென் கெலாட் மீது, 2007 – 09ல் விவசாயிகளுக்கான மானிய விலை உரத்தை குறைந்த விலைக்கு வாங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக சுங்கத்துறை, அவருக்கு 7 கோடி ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ.,யும், இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத் துறையும் விசாரித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள அக்ராசென் வீடு, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அக்ராசென்னுக்கு சொந்தமான ௧௬ இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.கெலாட் சகோதரர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
சோதனை
ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதை கண்டித்து, டில்லியில் கடந்த மூன்று நாட்கள் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர் அசோக் கெலாட். அவரை பழிவாங்கும் நோக்கில், அவரது தம்பி வீட்டில், சி.பி.ஐ.,யை பயன்படுத்தி, மத்திய அரசு சோதனை நடத்திஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement