ரணகளத்திலும் கிளுகிளுப்பு.. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு யோகம் தான்..!

அமெரிக்காவில் 40 வருட உச்சத்தில் பணவீக்கம், பிரிட்டன் நாட்டில் தொடர்ந்து விலைவாசி உயர்வால் அந்நாட்டு நடுத்தர மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்வதற்குக் கூடத் தடுமாறி வருகின்றனர், ஐரோப்பாவில் ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றத்தால் உருவான பாதிப்புகள் இன்னும் களைய முடியாமல் தவிக்கிறது.

உண்மையில் பல ஐரோப்பிய நாடுகள் எரிபொருள் தேவையை எப்படிப் பூர்த்தி செய்வது எனத் தெரியாமல் நிற்கிறது.

இந்த நிலையில் அனைத்துத் துறை நிறுவனங்களும் செலவுகளைக் குறைக்கவே அதிகப்படியான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது.

சேலம், ஈரோடு-க்கு வரும் ஐடி, டெக் நிறுவனங்கள்..!!

இந்திய ஐடி சேவை நிறுவனங்கள்

இந்திய ஐடி சேவை நிறுவனங்கள்

வெளிநாட்டு நிறுவனங்களில் ஏற்பட்டு உள்ள இந்த மாற்றம் இந்திய ஐடி நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் பலன் அளிக்க உள்ளது. இதனால் இந்தியா ரெசிஷன்-ஐ அசால்டாகத் தட்டி தூக்க உள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்குப் பின்பு டிஜிட்டல் சேவைகளுக்கும் ஆட்டோமேஷன் திட்டங்களுக்கும் அதிகளவில் செலவு செய்து வருகிறது.

குறைவான செலவில் சேவை

குறைவான செலவில் சேவை

இன்றைய வர்த்தகச் சூழ்நிலைக்கு மிகவும் அவசியமாகவும் இருக்கும், இதேவேளையில் பணவீக்கத்தின் பாதிப்பால் செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு ஒரே வழி குறைவான செலவில் ஐடி மற்றும் டெக் சேவைகளை அளிக்கும் இந்திய ஐடி நிறுவனங்களை நாடுவது தான்.

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ
 

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ

இந்த வழியில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவை செலவுகளைக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடும் நிறுவனங்களின் வர்த்தகத்தை அதிகளவில் பெறும் எனச் சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

அதிலும் குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகளவிலான திட்டங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடாக் செக்யூரிட்டிஸ்

கோடாக் செக்யூரிட்டிஸ்

ஆனால் இதேவேளையில் சில நாட்களுக்கு மூன்று தரகு சேவை நிறுவனமான கோடாக் செக்யூரிட்டிஸ் நிறுவனம் 2023-25 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் வளர்ச்சி அளவீடு 2-10 சதவீதம் மட்டுமே இருக்கும் எனக் கணித்துள்ளது.

ரெசிஷன்

ரெசிஷன்

இதேபோல் நீண்டகால ஐடி சேவை திட்டங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையும் எனக் கணித்துள்ளது. வல்லரசு நாடுகளில் வரும் ரெசிஷன் ஐடி சேவை துறையின் வளர்ச்சி வேகத்தைக் குறைத்தாலும் தொடர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

அதிகப்படியான வாய்ப்புகள்

அதிகப்படியான வாய்ப்புகள்

இதேவேளையில் அமெரிக்காவின் மோசமான பணவீக்கம் இந்திய ஐடி நிறுவனங்களுக்குப் புதிய வர்த்தக ரீதியிலும் சரி, வருமான அளவிலும் சரி வளர்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

இந்திய ஐடி சந்தை

இந்திய ஐடி சந்தை

இதனால் இந்திய ஐடி சந்தையில் வேலைவாய்ப்புப் பிரச்சனைகள் இருக்காது, இதேபோல் புதிய ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரிக்கும். சரி ஐடி ஊழியர்கள் மத்தியில் முக்கியமான விவாதம் நடந்துகொண்டு வருவது உங்களுக்குத் தெரியுமா..? கீழே இருக்கும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

யாருக்கு அதிக சம்பள உயர்வு.. WFH-ல் இருப்பவர்களுக்கா அல்லது ஆபீஸ் வருபவர்களுக்கா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian Top IT companies benefit from cost optimisation projects from North American, European clients

Indian Top IT companies benefit from cost optimisation projects from North American, European clients ரணகளத்திலும் கிளுகிளுப்பு.. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு யோகம் தான்..!

Story first published: Friday, June 17, 2022, 12:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.