இந்திய பங்கு சந்தையில் இன்றும் வீழ்ச்சியானது தொடர்ந்து கொண்டுள்ளது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சந்தையில் உள்ள மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்திருக்கலாம். இதுவும் இன்று சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இன்றும் பல நிறுவன பங்குகள் 52 வார சரிவினை எட்டியுள்ளன.
அமெரிக்கவின் வட்டி அதிகரிப்பு நடவடிக்கைக்கு பிறகு, ஸ்னதையில் இன்னும் தாக்கம் அதிகரித்துள்ளது எனலாம்.
சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்
இதற்கிடையில் நிபுணர்கள் வட்டி விகிதமானது அதிகரித்திருந்தாலும், இன்னும் பணவீக்கமானது அதிகரித்து கொண்டே தான் உள்ளது. இது பொருளாதாரத்தில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது மேற்கொண்டு பங்கு சந்தைகள் சரிய காரணமாக அமைந்துள்ளது.
நிறுவனங்கள் பாதிக்கலாம்
மறுபுறம் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், இது நிறுவனங்கள் கூடுதல் வட்டியை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது நிறுவனங்களின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
52 வார குறைவு விலையில் வர்த்தகம்
இதற்கிடையில் தான் பல்வேறு நிறுவன பங்குகளும் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. நிஃப்டி 50, பி எஸ் இ சென்செக்ஸ் உள்ளிட்ட பங்குகள் வருட சரிவினைக் கண்டுள்ளன. தொடர்ந்து ஆறாவது அமர்வாக இன்றும் சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.
அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம்
இதற்கிடையில் நிபுணர்கள் அடுத்த இரண்டு – மூன்று மாதங்கள் பொருளாதாரத்திற்கு ஒரு இடைக்கால கட்டமாக இருக்கும். இதன் காரணமாக அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம். அதற்கு நாம் தயராக இருக்க வேண்டும். தரமான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். பதற்றமடைந்து வெளியேற வேண்டாம் என மோதிலால் ஆஸ்வால் எச்சரித்துள்ளது.
மிகப்பெரிய இழப்பு
இதற்கிடையில் சமீபத்திய சரிவில் சில பங்குகள் அவற்றின் மதிப்பில் 6 – 41% வீழ்ச்சியினை கண்டுள்ளன. எட்டு குறியீட்டு பங்குகள் மட்டும் ஒட்டுமொத்தமான 12.76 லட்சம் கோடி இழப்பினை பதிவு செய்துள்ளன. இதில் அதிகம் நிதித் துறை சார்ந்த பங்குகள் இடம் பெற்றுள்ளன.
என்னென்ன பங்குகள் – இழப்பு?
இது கடந்த அக்டோபர் 19, 2021 முதல் நிஃப்டி 50ல் அதிகளவு இழப்பினை கொடுத்துள்ள பங்குகள்
ஹெச் டி எஃப் சி வங்கி – ரூ. -2,23,845 கோடி
டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் – ரூ. – 1,94,655 கோடி
இன்ஃபோசிஸ் – ரூ. – 1,78,145 கோடி
விப்ரோ – ரூ. – 1,58,469 கோடி
பஜாஜ் பைனான்ஸ் – ரூ. – 1,46,745 கோடி
ஹெச் டி எஃப் சி – ரூ. -1,36,935 கோடி
பஜாஜ் ஃபின்செர்வ் லிமிடெட் – ரூ.1,20,619 கோடி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – ரூ.-1,16,572 கோடி
worst performance: 8 stocks that have lost more in the Nifty 50 since October 19, 2021
Among the stocks that have suffered the most losses in the Nifty 50 since October 19, 2021 are HDFC Bank, Tata Consultancy Services and Infosys.