லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் நகரும் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ஈஸிஜெட் பயணி ஒருவர் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த நபர் ஊனமுற்றவர் என தெரிய வந்துள்ளது. குறித்த பயணி விமானத்தில் இருந்து வெளியேற, அவருக்கு உதவ சிறப்பு உதவிக்காக காத்திருந்த நிலையில், நகரும் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தாமதத்தால் அவர் ஆத்திரமடைந்ததாகவும், மதியம் 12.50 மணியளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு விமானத்தில் இருந்து இறங்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, குறித்த விமானம் விமான நிலையத்திற்கு வந்த பிறகு அவரது மனைவிக்கும் சிறப்பு உதவி தேவைப்பட்டது என தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஊழியர் ஒருவர் குறித்த பெண்மணிக்கு உதவ முன்வந்துள்ளதுடன், அவரது கணவர் விமானத்திலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அவசரம் காரணமாக அந்த நபர் தாமாகவே வெளியேற முயன்ற நிலையில், நகரும் படிக்கட்டில் தவறி விழுந்து, அதனால் ஏற்பட்ட காயத்தால் அவர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.