சுமார் 10 வருடங்களுக்கு முன்பு டெங்கு, மலேரியா போன்ற நோய் பெருமளவில் பரவி லட்சக்கணக்கான மக்களை பாதித்தது. அந்த நோய்களின் தாக்கம் மக்களிடையே கதவுகளையும், ஜென்னல்களையும் எப்போதும் மூடிவைக்கும் ஒரு பழக்க வழக்கத்திற்கு தள்ளியது.
இருப்பினும் இப்போதும் ஒரு சில இடங்களில் மலேரியா, டெங்கு காய்ச்சல்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த இரண்டு நோய்களையும் பரப்பும் முக்கிய நோய் கடத்தியாக கொசு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பிறகு சந்தையில் இறக்கப்பட்ட கொசு வத்தி, எலக்ரிக் கொசு மருந்து போன்றவை மக்களின் தினசரி வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
பின்னர் அரசின் நடவடிக்கையாக மாதம் தோரும் கொசு மருந்து வண்டிகள், வீடு தேடி வரும் கொசு மருந்து போன்ற சேவை வழங்கப்பட்டது. இதன்பின்னர்
இந்நிலையில் தற்போது மீண்டும் டெங்கு பரவல் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக சிங்கப்பூரில் நடப்பு ஆண்டில் 1,400 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் வரும் மாதங்களில் டெங்கு பரவல் இன்னும் அதிகரித்து காணப்படும் என மருத்துவ நிபுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பெரும் பாதிப்பு ஏற்படும் முன்பே பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிங்கப்பூர் அரசு இறங்கியுள்ளது.
மேலும் படிக்க | காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம் – முதலிரவில் ட்விஸ்ட் வைத்த மணப்பெண் !
ஒல்பேச்சியா என்ற திட்டத்தின் மூலம் டெங்கு பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய கொசுக்களை அழிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது சிங்கப்பூர் அரசு.
இது பிரபலமான மலட்டு தன்மைகொண்ட கொசுக்களை உருவாக்கும் செயல்முறையாகும். அவ்வாறு ஒல்பேச்சியா பேக்டீரியாவை கொசுக்களில் பரவவிட்டு, மலட்டு தன்மைகொண்ட கொசுக்களை உருவாக்க முடியும். அது மற்ற நோய் பரப்பும் பெண் கொசுக்களுடன் இணையும்போது அவை இடும் முட்டைகள் பொரியாது. இந்த செயல் முறை இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் என்ற ஆராய்ச்சியின் முடிவுகளின் அடிப்படையில் பல ஆண்டுகளாக பின்பற்ற வருகிறது .
இதுபற்றி அந்நாட்டு சுற்றுச்சூழல் மந்திரி கிரேஸ் ஃபூ கூறும்போது, தொடக்கத்தில் ஒவ்வொரு வாரமும் 20 லட்சம் மலட்டு கொசுக்கள் (ஏடிஸ் கொசுக்கள்) உற்பத்தி செய்யப்படும். அதன்பின்னர், வாரத்திற்கு 50 லட்சம் ஏடிஸ் கொசுக்கள் என இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கூறினார். டெங்குவை கட்டுப்படுத்தும் நோக்கில், இயற்கையாக உருவான கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்த சிறப்பு கொசுக்கள் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | படிச்ச முட்டாள்களிலேயே No.1 முட்டாள் அண்ணாமலை – யார் சொன்னது ?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR