Rohit Sharma Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது ஓய்வில் இருந்தாலும், கிரிக்கெட் ஆடி மகிழ்ந்து வருகிறார். 33 வயதான அவர் சமீபத்தில் மும்பையில் ஒரு சில பள்ளி சிறுவர்களுடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அது வீடியோவாக பதிவிடப்பட்ட நிலையில், ட்விட்டரில் சன்ஸ்கிருதி யாதவ் என்பவர் பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோ பதிவில், “ரோகித் சர்மா இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக மும்பை வொர்லியில் கல்லி (ஸ்ட்ரீட்) கிரிக்கெட் விளையாடுகிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரோகித் சர்மா இந்த வீடியோவில் ஸ்ட்ரைட் ஆக பந்தை விரட்டுகிறார். ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் அது சிக்ஸராக கூட இருக்கலாம். அவர் அடித்த ஷாட்க்கு அங்குள்ள சிறுவர்கள் கத்தி ஆரவாரம் செய்கிறார்கள். இந்த வீடியோ தற்போது ட்விட்டர் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், இணைய பக்கத்திலும் வைரலாகி வருகிறது.
கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இது மிகவும் தேவையான பிரேக் என்றே கூறலாம். ஏனென்றால் அவரது தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தயாராகி வருகிறது. இந்த அணிக்கு கேப்டன் ரோகித் அடுத்த வாரம் மீண்டும் திரும்பவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஜூலை 24 முதல் ஜூலை 27 வரை லெய்செஸ்டரில் பயிற்சி ஆட்டத்துடன் தொடங்க உள்ளது.
ரோகித் சர்மா முழு அளவிலான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் அணியை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும். சொந்த மண்ணில் அவர் கடந்த காலங்களில் வெற்றி கேப்டனாக இருந்துள்ளார். அவர் வழிநடத்திய இந்திய அணி 2018ல் நிதாஹாஸ் டிராபியை வென்றது. இன்னும் பல உள்நாட்டு தொடர்களையும் வென்றுள்ளது.
இதற்கிடையில், கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற முன்னணி வீரர்களுக்கு இந்திய மண்ணில் தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Rohit Sharma playing gully cricket at Worli, Mumbai ahead of the England tour. pic.twitter.com/XeZrDL53ii
— Sanskruti Yadav (@SanskrutiYadav_) June 15, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil