2 லட்சம் கிலோ மாட்டுச்சாணம் குவைத்துக்கு ஏற்றுமதி| Dinamalar

ஜெய்ப்பூர் :ராஜஸ்தானில் இருந்து குவைத் நாட்டுக்கு, 1.92 லட்சம் கிலோ மாட்டுச் சாணம் சமீபத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.உலகின் பல நாடுகள் இயற்கை விவசாய முறைக்கு திரும்பியுள்ளன. மேற்காசிய நாடான குவைத்தும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், அங்குள்ள ஒரு நிறுவனம் நம் நாட்டின் ராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூரில் உள்ள நிறுவனத்திடம் இருந்து மாட்டுச்சாணம் இறக்குமதி செய்யஒப்பந்தம் செய்திருந்தது.முதற்கட்டமாக, 1.92 லட்சம் கிலோமாட்டுச்சாணம் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இயக்குனர் பிரசாந்த் சதுர்வேதி கூறுகையில், “எங்கள் நிறுவனத்தின் கோசாலையில் இருந்து சுங்கத்துறையினரின் மேற்பார்வையில் மாட்டுச்சாணம் உருளைகளில் அடைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது,”என்றார்.மாட்டுச்சாணம் ஏற்றுமதி பற்றி இந்திய இயற்கை விவசாய பொருட்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் அதுல் குப்தாகூறியதாவது:

நம் நாட்டில் இருந்து மாட்டுச்சாணத்தை குவைத் வாங்குவது இதுவே முதன்முறை.உலக அளவில் பல நாடுகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் செலுத்துவதால், இங்கிருந்து மாட்டுச்சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.


கடந்த 2020 – 2021ம் ஆண்டில்மட்டும் 27 ஆயிரத்து 155 கோடி ரூபாய் மதிப்புள்ள மாட்டுச்சாணம் உள்ளிட்ட இயற்கைஉரங்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்குஏற்றுமதி செய்யப்


பட்டன.குவைத்தில் பசுஞ்சாணத்துக்கு கிராக்கிஏற்பட்டுள்ளது.இதை உரமிடுவதால் பேரீச்சை விளைச்சல் அதிகரித்து, திரட்சியான பழங்கள் கிடைப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துஉள்ளனர்.மாலத்தீவு, மலேஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து பசுஞ்சாணம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர்கூறினார்.


Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.