20 கன்டெய்னர்களில் தங்கம், வெள்ளி.. வாரி எடுத்து சென்ற திருடர்கள்.. இதன் மதிப்பு எவ்வளவு?

மெக்சிகோ துறைமுகம் ஒன்றில் சுத்திகரிக்கபட்ட தங்கம், வெள்ளித் தாது உள்ளிட்ட விலையுயர்ந்த தாதுக்கள் அடங்கிய 20 கன்டெய்னர்கள் திருடப்பட்டுள்ளன.

இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய திருட்டுகளின் ஒன்றாக கூறப்படுகிறது.

மன்சனில்லோ நகரில் இருக்கும் பசிபிக் கடல் துறைமுகத்தில் ஆயுதம் ஏந்தியவர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாவர்கள் மீது தாக்குதல்

இது குறித்து வெளியான லைவ் மிண்ட் செய்தியில், இந்த திருட்டினை உள்ளூர் ஊடகங்கள் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய திருட்டாக வெளியிட்டுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த திருட்டின் போது துறைமுகத்தில் உள்ள பாதுகாவல் குழுக்களை தாக்கிய பின்னர், தாக்குதல் நடத்தியவர்கள் கிரேன்கள், டிரக்குகளை பயன்படுத்தி திருடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படி ஒரு திருட்டா?

இப்படி ஒரு திருட்டா?

இதற்கு முன்பு இப்படி ஒரு திருட்டினை நாங்கள் கண்டதில்லை. ஆனால் கன்டெய்னர்களுடனே திருட்டப்பட்டதை தற்போது தான் கண்டோம். கன்டெய்னர்கள் இதற்கு முன்பும் திருடப்பட்டது. ஆனால் இவ்வாளவு மதிப்பிலான பொருட்களுடன் திருடப்படவில்லை.

எவ்வளவு மதிப்பு தெரியுமா?
 

எவ்வளவு மதிப்பு தெரியுமா?

திருடப்பட்ட கன்டெய்னர்களில் தங்கம் மற்றும் வெள்ளி, ஏசிக்கள் உள்ளிட்ட பல உயர் மதிப்புள்ள பொருட்கள் அடங்கும். எனினும் இது எவ்வளவு திருடப்பட்டது, இதன் மதிப்பு எவ்வளவு என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.

இது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மெக்சிகோவில் பெருகி வரும் குற்றசெயல்களுக்கு இதுவே அடையாளம் என மெக்சிகன் நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜோஸ் மெடினா மோரா தெரிவித்தூள்ளார்.

இங்கு பாதுகாப்பு பற்றாக்குறை அதிகரித்து வருகின்றது. இந்த நட்டில் என்ன நடக்கிறது என்பதற்கான அறிகுறி இதுவாகும். அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், விரைவில் இது கண்டறியப்பட வேண்டும் என்றும் மெடினா மோரா தெரிவித்துள்ளார்.

எப்படி நடந்தது?

எப்படி நடந்தது?

இது குறித்து உள்ளூர் செய்தியறிக்கைகள், சுமார் 10 ஆயுதம் ஏந்திய திருடர்கள் துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஒரு தனியார் சரக்கு அனுப்பும் முற்றத்தில் வலுக்கட்டாயமாக நுழைந்து, அங்குள்ள ஊழியர்களை தாக்குதல் நடத்தியதாகவும், அதன் பின்னர் அவர்கள் விரும்பிய கன்டெய்னர்களை தேடி எடுத்து சென்றாகவும் கூறப்படுகின்றது.

மிகப்பெரிய பிரச்சனையே இது தான்?

மிகப்பெரிய பிரச்சனையே இது தான்?

மெக்சிகோவில் சரக்கு திருட்டு என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. ஆனால் நெடுஞ்சாலைகளில் செல்லும் டிரக்கை கடத்துவதை கொண்டுள்ளது. ஆனால் ஒரே நேரத்தில் 20 கன்டெய்னர்களை, அதுவும் விலைமதிப்பற்ற பொருட்களுடன் திருட்டு நடந்திருப்பது இதுவே முதல் முறை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Theft of 20 shipping containers loaded with gold & silver, ACs .. Do you know where?

20 containers containing precious ores, including refined gold and silver ore, have been stolen from a port in Mexico.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.