புதுடில்லி :தேர்தல் கமிஷனால் அங்கீகாரம் பெற்ற எட்டு அரசியல் கட்சிகளுக்கு, 2020 – 21ம் நிதியாண்டில், 1,374 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயக சீர்திருத்த அமைப்பு என்ற தொண்டு நிறுவனம், அரசியல் கட்சிகளின் நன்கொடை, செலவினம் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்: கடந்த, 2020 – 21ம் நிதியாண்டில் தேர்தல் கமிஷனின் தேசிய அங்கீகாரம் பெற்ற எட்டு கட்சிகள், 1,374 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன.இதில், பா.ஜ., 54 சதவீதம், அதாவது, 752 கோடியே 33 லட்சம் ரூபாயுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. எனினும் பா.ஜ.,வின் வருவாய், 2019 – 20ம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, 79 சத
வீதம் குறைந்துள்ளது.காங்., 285 கோடியே 76 லட்சம் ரூபாய் திரட்டி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதே காலகட்டத்தில், திரிணமுல் காங்., தேசியவாத காங்., பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வருவாயும் குறைந்துள்ளது.
தேர்தல் பிரசாரம் மற்றும் பொது விளம்பரத்திற்காக பா.ஜ., அதிகபட்சமாக, 421 கோடி ரூபாய்; காங்., 91 கோடி ரூபாய்; திரிணமுல் காங்., 90 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement