Epidemic in North Korea: வடகொரியாவை வாட்டி வதைக்கும் மற்றொரு வைரஸ் தொற்று

சியோல்: கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வட கொரியாவில் மற்றொரு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.  நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஹெஜு நகரில் ஒரு தீவிர குடல் தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நோய் பரவல் தொடர்பாக வியாழக்கிழமையன்று வட கொரியா தெரிவித்தது. தற்போதைய கோவிட்-19 வெடிப்புக்கு கூடுதலாக மற்றொரு தொற்று நோய் வெடித்துள்ளதாக அறிவித்த வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் புதிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது தனிப்பட்ட மருந்துகளை நன்கொடையாக வழங்கியதாகக் கூறினார்.

புதிய தொற்றுநோய் எவ்வளவு தீவிரமானது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இந்தத் தொற்றுநோய் ஆபத்தானதாக இருக்கும் என்று நினைப்பதால் தான், மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக தனது  குடும்பத்தினருக்கான தனிப்பட்ட மருந்துகளை வழங்கியிருக்கிறார் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

அத்துடன், பொது வாழ்வாதாரத்தில் அக்கறை கொண்ட ஒரு தலைவராக கிம்மின் பிம்பத்தை முன்னிறுத்தும் முயற்சியாகவும் இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தென்கிழக்கு ஹெஜு நகரில் ‘ஒரு கடுமையான குடல் தொற்றுநோய்’ கண்டறியப்பட்டவர்களுக்கு கிம் புதன்கிழமை தனது குடும்பத்தின் இருப்பு மருந்துகளை வழங்கினார் என்று அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (Korean Central News Agency) தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | வட கொரியாவில் தொடரும் கொரோனா பீதி

கிம் மற்றும் அவரது மனைவி ரி சோல் ஜூ அவர்கள் நன்கொடையாக அளித்த மருந்துகளை மதிப்பாய்வு செய்வதைக் காட்டும் புகைப்படங்களை முதல் பக்கத்தில் கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

தொற்றுநோய் என்ன, எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை KCNA சரியாக விவரிக்கவில்லை.

வட கொரியாவில் உள்ள “ஒரு குடல் தொற்றுநோய்” என்பது டைபாய்டு, வயிற்றுப்போக்கு அல்லது காலரா போன்ற தொற்று நோயைக் குறிக்கிறது என்று சிலர் கூறுகின்றனர், அவை அசுத்தமான உணவு மற்றும் நீர் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் மலம் மூலம் கிருமிகளால் ஏற்படும் குடல் நோய்களாகும்.
 
இத்தகைய நோய்கள் வட கொரியாவில் வழக்கமாக ஏற்படுவதுதான். அதற்குக் காரணம், அங்கு நீர் சுத்திகரிப்பு வசதிகள் இல்லாதது மற்றும் வடகொரியாவின் பொது சுகாதார உள்கட்டமைப்பு 1990 களின் நடுப்பகுதிக்கு பிறகு கட்டமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | வடகொரியா மீது பொருளாதாரத் தடை: வீட்டொ அதிகாரத்தை பயன்படுத்திய இரு நாடுகள்

வட கொரியா கடந்த மாதம் கொரோனா வைரஸ் வெடித்ததைத் தொடர்ந்து காய்ச்சல் அறிகுறிகளுடன் அதிகரித்து வரும் நோயாளிகளைப் புகாரளித்த பின்னர், தென் கொரியாவின் உளவு நிறுவனம், அந்த காய்ச்சல் வழக்குகளில் “கணிசமான எண்ணிக்கையில்” தட்டம்மை, டைபாய்டு மற்றும் பெர்டுசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர் என்று கூறியது.

“வட கொரியாவில் தட்டம்மை அல்லது டைபாய்டு பரவுவது அசாதாரணமானது அல்ல. அங்கு தொற்று நோய் வெடித்தது உண்மை என்று நான் நினைக்கிறேன், ஆனால் கிம் தனது மக்களை கவனித்துக்கொள்கிறார் என்பதை வலியுறுத்த வட கொரியா அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறது” என்று வட கொரியாவில் உள்ள சுகாதார பிரச்சினைகளை மையமாகக் கொண்ட இணையதளம் கூறுகிறது.

கடந்த மாதம், கிம் ஏற்கனவே தனது குடும்பத்தின் மருந்துகளை COVID-19 நோயாளிகளுக்கு அனுப்பியதாக வடகொரிய அரசு ஊடகஙக்ள் செய்தி வெளியிட்டிருந்தன.

நாட்டின் 26 மில்லியன் மக்களில் 4.5 மில்லியனுக்கும் அதிகமானோர் அடையாளம் தெரியாத காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் 73 பேர் மட்டுமே இறந்துள்ளனர் என்று KCNA தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | மூத்த ராணுவ அதிகாரி மரணம்..! சவப்பெட்டியைச் சுமந்து சென்ற கிம் ஜாங் உன்

நாட்டில் போதுமான சோதனைக் கருவிகள் இல்லாததால், உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளில் ஒரு பகுதியை மட்டுமே நாடு அடையாளம் கண்டுள்ளது. பல வெளிநாட்டு நிபுணர்கள் வட கொரியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் இறப்பு எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்,

வட கொரியாவின் கிம் ஜான் உன், தனக்கு எந்த அரசியல் சேதமும் ஏற்படாமல் தடுக்க இறப்பு எண்ணிக்கையை குறைவாகவே தெரிவித்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கடந்த வாரம் ஆளும் கட்சி மாநாட்டின் போது, ​​தொற்றுநோய் நிலைமை “கடுமையான நெருக்கடியின்” கட்டத்தை கடந்துவிட்டது என்று கிம் கூறினார்.

ஆனால் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை தொடரும் நிலையில் கொரோனா தொற்று குறைந்திருப்பதாக வட கொரியா கூறுவது நம்பக்கூடியதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

நீண்டகால தொற்றுநோய்மற்றும் ஐ.நா. தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே பொருளாதார சிக்கல்களால் தவித்து வரும் வடகொரியாவுக்கு மேலும் பல பிரச்சனைகளை இந்த புதிய தொற்றுநோய் ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | இந்தியாவைக் குறை கூறுவதால் பிரச்சனை தீராது…ஜி-7 நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த சீனா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.