Fitness Tips: தொப்பையை குறைக்க 5 கோல்டன் ரூல்ஸ்!

எடை இழப்பு என்று வரும்போது, ​​மக்கள் பெரும்பாலும் தொப்பையை குறைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். தட்டையான வயிறு என்பது பலருக்கு ஒரு ஃபிட்னெஸ் கோல் ஆகும். ஆனால் அதை அடைய எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பது அவர்களுக்கு பெரும்பாலும் தெரியாது.

உணவியல் நிபுணர் நடாஷா மோகன் கருத்துப்படி, தட்டையான தொப்பையை பராமரிப்பது என்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிப்பதாகும். “ஒரு பெரிய இடுப்புப் பகுதியானது நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். நீங்கள் டயட்டில் இருக்கும்போது தொப்பையை மட்டும் குறிவைப்பது எளிதல்ல. ஆனால் ஒட்டுமொத்தமாக உடல் எடையை குறைப்பது, வயிற்றில் உள்ள கொழுப்பின் அபாயகரமான அடுக்குகளையும் குறைக்க உதவும்,” என்று அவர் கூறுகிறார்.

நிபுணர் பின்வரும் செய்ய வேண்டியவைகளை பட்டியலிடுகிறார்:

சர்க்கரை, சர்க்கரை கலந்த பானங்களைத் தவிர்க்கவும்

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் உங்களுக்கு நல்லதல்ல; அவற்றை உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கும். இது உங்கள் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உங்கள் உணவில் சர்க்கரையின் அளவைக் குறைக்க முயற்சிக்கவும் மற்றும் சர்க்கரை பானங்களை முற்றிலும் தவிர்க்கவும். ஆனால் இது பழங்களுக்கு பொருந்தாது, அவை நார்ச்சத்து நிறைந்தது மற்றும் ஆரோக்கியமானவை.

கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கவும்

குறைவான கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது கொழுப்பை இழக்க ஒரு வழியாகும். எடை இழப்புக்கு உதவும் கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கும்போது உங்கள் பசி குறைகிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.

கார்போஹைட்ரேட்டுகளை இழப்பது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும், டைப் 2 நீரிழிவு நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும். சர்க்கரை, மிட்டாய் மற்றும் வெள்ளை ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளை தவிர்க்கவும்.

நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள்

நிறைய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, எடை குறைக்க உதவும். காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட தாவர உணவுகளை சாப்பிடுவதே சிறந்த வழி. முழு ஓட்ஸ் மற்றும் பருப்பு வகைகள் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்கள்.

வழக்கமான உடற்பயிற்சி

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் எடை மற்றும் தொப்பை கொழுப்பைக் குறைக்க உடற்பயிற்சி சிறந்த வழிகளில் ஒன்றாகும். நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் நீச்சல் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் உங்கள் தொப்பையை பெருமளவில் குறைக்கும்.

உங்கள் உணவு உட்கொள்ளலைக் கண்காணிக்கவும்

அதிக புரதம் மற்றும் குறைந்த கார்ப் உணவைக் கொண்டிருந்தாலும், உங்கள் உணவைக் கண்காணிக்கவில்லை என்றால், உங்கள் உணவைக் குறைத்து மதிப்பிடுவது அல்லது மிகைப்படுத்துவது எளிது.

உங்கள் புரத உட்கொள்ளலை அதிகரிப்பது அல்லது பயனுள்ள எடை இழப்புக்கு கார்போஹைட்ரேட்டுகளைக் குறைப்பது போன்ற குறிப்பிட்ட இலக்குகளை அடைய, கண்காணிப்பு உங்களுக்கு உதவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.