Samsung Galaxy F13 Launch Date: சாம்சங் தனது புதிய கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 22 அன்று, பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் இந்த ஸ்மார்ட்போனுக்கென தனி பக்கத்தை ஷாப்பிங் தளம் திறந்துள்ளது.
கொரிய நிறுவனமான சாம்சங் தனது F தொடர் ஸ்மார்ட்போன்களின் வரிசையை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே புதிய கேலக்ஸி எஃப்13 போன் வெளியீடு பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தொகுப்பில் வரும் இந்த ஸ்மார்ட்போனுக்கு பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஃப்13 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் (Samsung Galaxy F13 Expected Specifications)
நிறுவனம் இதுவரை ஸ்மார்ட்போனின் விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், சில தகவல்கள் மட்டும் பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தின் வாயிலாக கசிந்துள்ளன.
அதன்படி, ஸ்மார்ட்போனில் பெரிய 6,000mAh பேட்டரி இருக்கும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம். இதனை ஊக்குவிக்க 15W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
92278859சாம்சங் கேலக்ஸி எஃப்13 எதிர்பார்க்கப்படும் விலை (Samsung Galaxy F13 Expected Price in India)கேலக்ஸி எஃப்13 போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொடுக்கப்பட்டிருக்கும். 3.5mm ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போன்ற இணைப்பு ஆதவுகளையும் இந்த போன் பெறும். செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்ஸ்மார்ட்போனை, சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேக எக்ஸினோஸ் 850 சிப்செட் இயக்கும். இதனை கீக்பெஞ்ச் உறுதிபடுத்தியுள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் அறிமுகம் செய்யப்படுகிறது.இந்தியாவில் இதன் விலை ரூ.12,000க்கும் குறைவான விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முந்தைய பதிப்பான கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போன் ரூ.9,499 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Samsung-Galaxy-F13 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Exynos 850 (8nm)டிஸ்பிளே6.5 inches (16.51 cm)சேமிப்பகம்32 GBகேமரா48 MP + 8 MP + 2 MP + 5 MPபேட்டரி6000 mAhஇந்திய விலை15104ரேம்3 GBமுழு அம்சங்கள்