IND vs SA: அவேஷ் கான் வெளியே, யார் உள்ளே? இரு அணிகளின் உத்தேச லெவன் இதுதான்!

Live updates of India Vs South Africa, 4th T20 Match in tamil: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. எனவே, தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது டி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இரவு நடக்கிறது.

அவேஷ் கான் வெளியே?…

ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி முதல் இரு ஆட்டங்களில் சொதப்பி தோல்வி கண்டது. பின்னர் விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் எழுச்சி பெற்றது. முதலிரண்டு ஆட்டங்களில் ரன் சேர்க்க தடுமாறி வந்த தொடக்க ஆட்டக்கரார் ருதுராஜ் கெய்க்வாட் 3-வது ஆட்டத்தில் அரைசதம் அடித்து மிரட்டினார். இதன் மூலம் அணி அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார்.

இந்த தொடரில் இந்திய அணி சார்பில் அதிக ரன்களை எடுத்தவராக இருக்கும் தொடக்க வீரர் இஷான் கிஷான் நல்ல ஃபார்மில் உள்ளார். ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் கடைசி ஓவரில் அணிக்கு தேவையான ரன்களை தேடிக்கொடுத்து வருகின்றனர். இருப்பினும், மிடில் ஆர்டரில் களமாடும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் (29, 5, 6 ரன்) ஆகியோரின் பொறுப்பற்ற பேட்டிங் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல் அசத்தி வருகின்றனர். குறிப்பாக, புவனேஷ்வர் குமார் பவர்பிளேயில் மிரட்டுகிறார். அவர் மீண்டும் ஒருமுறை இந்திய வேகப்பந்து வீச்சுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு மிகத்துல்லியமாக பந்துகளை வீசி அசத்தி வருகிறார். ஆனால், வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான் தனக்கான இடத்தை பிடிக்க தடுமாறி வருகிறார். அவரது பந்துவீச்சு பாணி எதிரி அணியினர் கணிக்கும் வகையில் உள்ளது. இதேபோல் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பராகவும், விக்கெட்டுகளை வீழ்த்த திணறுபவராகவும் இருக்கிறார்.

இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அவருக்கு பதில் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் களமாட வாய்ப்புள்ளது. ஏனென்றால், அவரது இடக்கை பந்துவீச்சு, அவரின் துல்லியமான யார்க்கர்கள் மற்றும் வேகத்தை மாற்றும் திறன் அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.

தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென்ஆப்பிரிக்கா…

கேப்டன் டெம்பா பாவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆச்சரியமூட்டி வருகிறது. அந்த அணியின் மிடில் -ஆடர் வீரர் டேவிட் மில்லர் ஐபிஎல்லில் இருந்த அதே ஃபார்மை தொடர்ந்து வருகிறார். ஆனால், நடப்பு சீசனில் ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய வான்டெர் டஸன் ரன் மழை பொழிந்து வருகிறார். குயின்டான் டி காக்கிற்காக அணியில் இணைந்த ஹென்ரிச் கிளாசென் (81 ரன்), கட்டாக்கில் நடந்த 2-வது ஆட்டத்தில் சரவெடி வெடித்தார். ஆனால் 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை இந்திய பந்துவீச்சாளர்கள் 131 ரன்னில் சுருட்டி அசத்தினர்.

தென்ஆப்பிரிக்க அணியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் மார்க்ராம் எஞ்சிய போட்டிகளிலும் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காயத்தில் இருந்து தேறியுள்ள விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் நேற்று பயிற்சி மேற்கொண்டார். எனவே இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

இந்திய மண்ணில் முதலிரண்டு ஆட்டத்தை வசப்படுத்திய தென்ஆப்பிரிக்கா, ஒரு தோல்விக்கு பிறகு இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வசப்படுத்தும் தீவிரம் காட்டும். இந்த தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே அதற்கான வியூகங்களுடன் களமாடும் என நம்பலாம். மொத்தத்தில் வெற்றியை இலக்காக குறி வைத்து களமிறங்கும் இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:

இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், உம்ரான் மாலிக்

தென்ஆப்பிரிக்கா அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ், அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி, குயின்டன் டி கோர்ட். என்கிடி, மார்கோ ஜான்சன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்:

இந்தியா

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.

தென்ஆப்பிரிக்கா

டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், டுவைன் பிரிட்டோரியஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

South Africa in India, 5 T20I Series, 2022Saurashtra Cricket Association Stadium, Rajkot   17 June 2022

India 

vs

South Africa  

Match Yet To Begin ( Day – 4th T20I ) Match begins at 19:00 IST (13:30 GMT)

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.