பாட்னா,
ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 ரெயில்களை தீயிட்டு கொளுத்தினர். பீகாரில் தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது. பீகாரில் ரெயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது.
பீகாரில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ரெயில் சேவைகள் இன்று இரவு 8 மணி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நாளை அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ரெயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.