அக்னிபத்: வேளாண் சட்டத்தைப் போல ரத்தாகுமா..?
இந்திய ராணுவத்தில் புதிய முறையில் ஆள் சேர்க்கும்விதமாக, `அக்னிபத்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள்முதலே, இந்தத் திட்டத்துக்கு பல தரப்புகளிலிருந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் வந்துகொண்டேயிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு எதிராக, இளைஞர்கள் போராட்டங்களும் நடத்திவருகின்றனர். அதிலும் பீகார், தெலங்கானா போன்ற மாநிலங்களில் போராட்டத்தில் ரயில்களுக்கு தீவைப்பு சம்பவம் எனப் போராட்டக்களம் கலவரமாக மாறியது.
இந்திய ராணுவப்படையில் புதிய முறையில் ஆள்சேர்க்கும் `அக்னிபத்’ திட்டத்துக்கு நாடுமுழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் வந்தவண்ணம் உள்ளன. பீகார், தெலங்கானா மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில், தெலங்கானாவில் ஒருவர் உயிரிழந்தார்.
இதனிடையே, ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ரயில்வே சொத்துகளைச் சேதப்படுத்த வேண்டாம்” எனப் போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், துணை ராணுவமான மத்திய ஆயுத காவல்படையில் அக்னிபத் வீரர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. ஆனால், போராடும் இளைஞர்கள் இதை ஏற்பதாக இல்லை.
இந்த நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ததுபோல, அக்னிபத் திட்டத்தையும் மோடி திரும்பப்பெற வேண்டும் என்ற குரல்கள் எழத்தொடங்கி உள்ளன. விவசாய மசோதாவைத் திரும்பப் பெற்றதுபோல் இந்தத் திட்டத்தையும் மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டிருக்கிறார். அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமின் தலைவரான அசாதுதீன் ஒவைசியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.
ஒற்றைத் தலைமை: அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு யாருக்கு அதிகம்..?
அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், கடந்த சில தினங்களாகவே அ.தி.மு.க-வில் `ஒற்றைத் தலைமை’ என்ற விவாதம் பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகிய இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்
இந்த நிலையில், அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இன்று தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
‘மரியாதை குறைவு.. அலைக்கழிப்பு’ – கோவை தனியார் ரயில் நிர்வாகம் மீது பயணிகள் புகார்
கோவை – ஷீர்டிக்கு இயக்கப்பட்ட தனியார் ரயில் சேவைக்கு ஏற்கெனவே பல்வேறு அமைப்பினர் மற்றும் ரயில்வே தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 14-ம் தேதி இந்த ரயில் வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து ஷீர்டி புறப்பட்டது.
“அதனால்தான் அமைச்சர் மனோ தங்கராஜ் கோயிலுக்கு வரக் கூடாது என்கிறோம்..!” – பாஜக எம்.எல்.ஏ
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில் நிகழ்ச்சிகளில் மாற்று மதத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜைத் தலைமை தாங்க அழைக்கக் கூடாது என பா.ஜ.க போராடிவருகிறது. அமைச்சர் மனோ தங்கராஜ் குமாரகோவிலில் தேர் வடம்பிடிக்கச் சென்றபோதும், மண்டைக்காட்டில் திருவிளக்கு பூஜையை தொடங்கிவைக்கச் சென்றபோதும் நேரடியாகச் சென்று போராடியது பா.ஜ.க.
எதற்காக இந்தப் போராட்டம்..? மனோ தங்கராஜுக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தியின் ஆவேசமான பேட்டியைப் படிக்க க்ளிக் செய்க…
“கும்மிடிப்பூண்டி டு திருநெல்வேலி..!” – கொலையில் முடிந்த முகநூல் பழக்கம்
முகநூல் மூலம் பெண்ணிடம் பழகி வந்த நபர், திருநெல்வேலிக்கு வரவழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மாயமானவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சடலமாக மீட்கப்பட்டது எப்படி, கொலைக்கான காரணம் உள்ளிட்ட விவரங்களைப் படிக்க க்ளிக் செய்க…
#AppExclusive
பண்ணைப்புரத்தில் பாவலர் சகோதரர்கள்!
பாவலர் குடும்பத்துக்கே ஒரு கலைவெறி கொஞ்சநஞ்மில்ல. ஏறத்தாழ 20 வருடங்களுக்கு முன் ஒரு வைராக்கியத்தோடு ஊரைவிட்டுக் கிளம்பியபின், தாங்கள் பிறந்த மண் பண்ணைப்புரம் கிராமத்தையும், கிராம மக்களையும் சந்திக்கத் தன் இசைப் பரிவாரங்களுடன் (இலவசமாய் இசை நிகழ்ச்சி நடத்த) இளையராஜா சகோதரர்கள் வருகிறார்கள் என்பது, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு சென்டிமென்ட்டலான விஷயமாக இருந்தது.
பாவலர் குடும்பத்துக்கே இருந்த கலைவெறி கொஞ்சநஞ்சமல்ல.. பாவலரின் இசைப்பயணமும், இசையில் சாதித்த தருணமும் படிக்க படிக்க சுவாரஸ்யமானவை. மேலும் படிக்க க்ளிக் செய்க…