அடபாவிங்களா.. சமாதி கட்டுனீங்க சரி.. அது என்னடா கீழ எழுதி வச்சியிருக்கீங்க..!

அமெரிக்காவின் முன்னணி டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது Internet Explorer பிரெளசரை ஜூன் 15ம் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் 27 ஆண்டுகாலமாகப் பயன்பாட்டில் இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வரலாறு முடிவுக்கு வருகிறது.

இந்தச் செய்தி இணைய வாசிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தென் கொரியாவில் ஒருவர் Internet Explorer-க்குக் கல்லறை கட்டியது மட்டும் அல்லாமல் நக்கலாக ஒரு வாசகத்தையும் எழுதியுள்ளார்.

ஜூலை மாதத்தில் 3 ஜாக்பாட்.. யாருக்கெல்லாம் லாபம்..!

இந்தப் புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருவது மட்டும் அல்லாமல் பலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.

 சாப்ட்வேர் இன்ஜினியர்

சாப்ட்வேர் இன்ஜினியர்

தென் கொரியா நாட்டின் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆனா ஜங் கி-யங் (Jung Ki-young) மைக்ரோசாப்ட் தனது Internet Explorer பிரெளசர்-க்குக் கல்லறை எழுப்பியுள்ளார்.

 430,000 வான் செலவு

430,000 வான் செலவு

சுமார் 27 வருடமாகப் பயன்பாட்டில் இருந்த Internet Explorer பிரெளசர்-க்கு சுமார் 430,000 வான் அதாவது 25,955.84 ரூபாய் செலவு செய்து கல்லறை எழுப்பியுள்ளார்.

 கல்லறை

கல்லறை

இந்தக் கல்லறை கல்லில் Internet Explorer பெயர் மற்றும் அதன் e லோகோ ஆகியவற்றைப் பொறிக்கப்பட்டு, அதன் கீழ் கடந்த 27 வருடமாக மற்ற பிரெளசர்-களை டவுன்லோடு செய்ய நன்கு பயன்பட்டு உள்ளது என்று நக்கலாகப் பதிவு செய்துள்ளார்.

 குசும்பு புடிச்ச ஆளு
 

குசும்பு புடிச்ச ஆளு

இந்தக் கல்லறை ஜங் கி-யங் -ன் சகோதரர் கொரியாவின் கியோங்ஜு பகுதியில் நடத்தும் கபே கடையில் வைக்கப்பட்ட நிலை தற்போது இந்தப் புகைப்படம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆனா குசும்பு புடிச்ச ஆளுயா இந்த Jung Ki-young…

 இண்டர்நெட்

இண்டர்நெட்

இண்டர்நெட் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்த பின்பு இணையப் பக்கங்களை அதாவது வெப் பேஜ்-ஐ பார்க்க வெறுமெனப் பார்க்க முடியாது, அதற்குப் பிரெளசர் என்பது தேவை.

பிரெளசர்

பிரெளசர்

ஆரம்பக்கட்டத்தில் பிரெளசர் மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்ட நிலையில் மோசைக், நெட்ஸ்கேப் ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாக 1995ஆம் ஆண்டுப் பில் கேட்ஸ் தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனம் Internet Explorer அறிமுகம் செய்தது.

 Internet Explorer ஆதிக்கம்

Internet Explorer ஆதிக்கம்

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவோர் அனைவருக்கும் Internet Explorer தான் விதிவிளக்காக இருந்த நிலையில் சக போட்டி நிறுவனங்கள் அடுத்தடுத்து வர்த்தகத்தை விட்டு வெளியேறியது, இதனால் Internet Explorer பிரெளசர் பிரிவு சேவையில் மிக்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தியது.

 Mozilla, Safari பிரெளசர் அறிமுகம்

Mozilla, Safari பிரெளசர் அறிமுகம்

Mozilla அறிமுகத்தின் மூலம் நெட்ஸ்கேப் நேவிகேட்டார் மொத்தமாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி மூலம் Safari பிரெளசர் குறிப்பிடத்தக்க அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தியது.

 க்ரோம் தளம்

க்ரோம் தளம்

ஆனால் 2008 ஆம் ஆண்டுக் கூகுள் அறிவமுகம் செய்த க்ரோம் தளம் மொத்த வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றி மிகப்பெரிய ஆதிக்கத்தை இன்றுளவும் செலுத்துகிறது. கூகுள் க்ரோம் ஆதிக்கத்தின் உச்சத்தில் இருந்த போது ஓபேரா மினி அறிமுகமாகி மொபைல் பிரெளசர் வர்த்தகத்தைக் கைப்பற்றியது.

 மைக்ரோசாப்ட் எட்ஜ்

மைக்ரோசாப்ட் எட்ஜ்

இந்நிலையில் கூகுள் க்ரோம் ஆதிக்கத்தைத் தகர்க்க மைக்ரோசாப்ட் நிறுவனம் எட்ஜ் என்ற தளத்தை 2015ல் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தை மட்டுமே பெற்றது.

27 ஆண்டுக் காலமாகப் பயன்பாட்டில் இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் முடிவுக்கு வருவது குறித்துச் சில மீம்களும் வெளியாகியுள்ளது.

 

அடபாவிங்களா.. சமாதி கட்டுனீங்க சரி.. அது என்னடா கீழ எழுதி வச்சியிருக்கீங்க..!
அடபாவிங்களா.. சமாதி கட்டுனீங்க சரி.. அது என்னடா கீழ எழுதி வச்சியிருக்கீங்க..!
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

South Korea Internet Explorer gravestone became hot topic in internet; Check bio in Tombstone

South Korea Internet Explorer gravestone became hot topic in internet; Check bio in Tombstone அடபாவிங்களா.. சமாதி கட்டுநீங்க சரி.. அது என்னடா கீழ எழுதி வச்சியிருக்கீங்க..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.