கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஜூன் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த கட்டுப்பாடுகளின் படி, வழக்கறிஞர்கள், வழக்காடிகள், வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும், தனி மனித விலகலை பின்பற்ற வேண்டும், கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க… பூரிப்பான பேச்சும்.. விதவிதமான உணவுகளுடன் விருந்தும்.. களைகட்டிய விக்ரம் சக்சஸ் ப்ரஸ் மீட்
வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் வழக்காடிகள் தவிர மற்றவர்கள் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், உயர் நீதிமன்ற கட்டிடத்துக்குள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தலைமைப் பதிவாளர் தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM