காபூல்:தெற்கு ஆசியாவைச் சேர்ந்த ஆப்கனில் இந்தாண்டு வறட்சியால் வேளாண் பொருட்கள் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. ஆப்கனில், கோடை காலத்தில் வழக்கமாக 1 கிலோ வெங்காயம், 4 ரூபாய் வரை விற்கப்படும். இந்தாண்டு வெங்காய உற்பத்தி குறைந்ததால், 1 கிலோ, 25 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உள்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, அதன் ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, வேளாண் மற்றும் கால்நடை கூட்டமைப்பு உறுப்பினர் மிர்வய்ஸ் ஹஜிசாதா தெரிவித்துள்ளார். இதனால் இந்தியா, பாக்., ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு, ஆப்கன் வெங்காயம் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
காபூல்:தெற்கு ஆசியாவைச் சேர்ந்த ஆப்கனில் இந்தாண்டு வறட்சியால் வேளாண் பொருட்கள் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. ஆப்கனில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.