டாடா குழுமத்துக்கு சொந்தமான மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் Brand Finance என்ற அமைப்பின் மதிப்பீட்டின்படி உலகில் வலிமையான ஹோட்டல் பிராண்ட் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் பரிச்சயம், பணியாளர்களின் திருப்தி, உலக தரம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவை, ஆகியவை காரணமாக AAA என்ற மதிப்பு கொண்டுள்ளது.
மேலும் Brand Finance குறியீட்டில் 100க்கு 88.9 மதிப்பெண்களை பெற்று அசத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசுடன் டாடா டெக்னாலஜிஸ் கூட்டணி.. எதற்காகத் தெரியுமா..?!
தாஜ் ஹோட்டல்
Brand Finance வழங்கும் ‘ஹோட்டல் 50, 2022’ ஆண்டு அறிக்கையில் உலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் வலிமையான ஹோட்டல் என்ற அங்கீகாரம் தாஜ் ஹோட்டலுக்கு கிடைத்துள்ளது. இந்த மதிப்பீட்டில் பிரீமியர் இன், ஹில்டன் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ், ஹாம்ப்டன் பை ஹில்டன், எம்பசி சூட்ஸ் ஹோட்டல்கள், ஜே.டபிள்யூ மேரியட் மற்றும் ஷங்ரி-லா ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ், ரெசிடென்ஸ் இன் மேரியட், வால்டோர்ஃப் அஸ்டோரியா ஹோட்டல் அண்ட் ரிசார்ட் மற்றும் டபிள்யூ ஆகிய ஹோட்டல்களை உலக அளவில் முன்னணியில் தாஜ் ஹோட்டல் இடம்பிடித்துள்ளது.
உலக அளவில் பிரபலம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தின்போது ஹோட்டல் நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை அடைந்த நிலையில் தாஜ் ஹோட்டலுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தாஜ் ஹோட்டல் தற்போது உலக அளவில் பிரபலமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு பிரபலங்கள்
மாளிகை போன்று இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலான தாஜ் ஹோட்டலில் 565 அறைகள் உள்ளன. இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களும் இந்த ஓட்டலில் தங்கி உள்ளனர் என்ற பெருமையை பெற்றுள்ளது. பீட்டில்ஸ், ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ், பில் கிளின்டன், ஜாக் சிராக், கென்ட் கிங் மற்றும் ராணி நார்வே, டியூக் & டச்சஸ், எடின்பர்க் டியூக், வேல்ஸ் இளவரசர், ரோஜர் மூர், ஜோன் காலின்ஸ், மிக் ஜாக்கர், ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட், டீ பர்பில், மைக்கேல் பாலின், ஹிலாரி கிளிண்டன், பாரக் ஒபாமா, மிஷல் ஒபாமா, ஓப்ரா வின்ஃப்ரே உள்பட பல சர்வதேச பிரபலங்கள் இந்த ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
தீவிரவாதிகளின் தாக்குதல்
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தாஜ் ஹோட்டல் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. அப்போது இந்த ஹோட்டலில் வெளிநாட்டவர் உட்பட சுமார் 167 பேர் தங்கியிருந்த நிலையில் இந்த ஓட்டலில் தங்கி இருந்த 37 தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியாகினர்.
புத்துயிர்
தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக கடும் சேதம் அடைந்த இந்த ஹோட்டல் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் புத்துயிர் பெற்று சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது.
டாடா
ஒருமுறை வெள்ளையர்களின் வாட்சன் ஹோட்டலுக்கு டாடா செல்ல முயன்றபோது வெள்ளையர்களுக்கு மட்டுமே அனுமதி என தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் டாடா இந்த ஹோட்டலை காட்டினார் என்று கூறப்படுகிறது.
மருத்துவர்களுக்கு இலவசம்
முதல் உலகப் போரின்போது இந்த ஹோட்டல் மருத்துவமனையாக மாற்றப்பட்டது என்பதும் சுமார் 600 படுக்கைகளில் போரில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கோவிட் பாதிப்பு நேரத்தில் வெளியூரில் இருந்து மும்பைக்கு வந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் நர்ஸ்களும் இந்த ஹோட்டலில் இலவசமாக தங்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hotel Taj has been rated as world’s strongest brand
Hotel Taj has been rated as world’s strongest brand | டாடாவின் தாஜ் ஹோட்டலுக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை!