இந்தியாவில் புதிதாக 13,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 213 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று இது மேலும் உயர்ந்து 12 ஆயிரத்து 847 ஆக பதிவானது.
இந்நிலையில் இன்று புதிதாக 13 ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 216 பேர் பாதிக்கப்ட்டனர்.
இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 32 இலட்சத்து 83 ஆயிரத்து 793 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 24 ஆயிரத்து 840 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8,148 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 இலட்சத்து 90 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 68 ஆயிரத்து 108 பேர் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.