இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே 9 வருடத்திற்குப் பிறகு சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாக துணைத் தலைவர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.
இருதரப்பு வர்த்தகத்திற்கு இடையூறாக இருக்கும் சிக்கல்களை தீர்ப்பது, எல்லை தாண்டிய முதலீடுகளுக்கான சட்டப்பூர்வ கட்டமைப்பை வழங்குவது உள்ளிட்டவைகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.