இந்திய சினிமாவில் இது சமந்தா காலம்! – சென்னைப் பெண்ணைப் பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருகிறார் நடிகை சமந்தா. அவரது அண்மைக்கால சொந்த வாழ்க்கை பற்றிய தகவல்கள் அதிகமாக இணைய உலகில் வட்டமடித்து வந்தாலும் சமந்தாவை பற்றி தெரியாத சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

1) ஏப்ரல் 28, 1987ல் சமந்தா பிறந்தார் என தெரிந்திருக்கும். ஆனால் சமந்தாவின் அப்பா பிரபு ஆந்திராவைச் சேர்ந்தவர், அம்மா நின்னேட்டே கேரளாவைச் சேர்ந்தவர். சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்து, ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலும், ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ்ஜில் பி.காம் தனது படிப்பை முடித்தவர். சினிமாவில் எப்படியோ படிப்பிலும் சமந்தாதான் டாப் ரேங்கர்.

2) பாக்கெட் மணிக்காக 14 வயதில் மாடலிங் துறையில் பணியாற்றி அதன் மூலம் சில விளம்பரங்களிலும் நடிக்க தொடங்கிய சமந்தாதான் இப்போ கோலிவுட் , டோலிவுட்டோட முன்னணி ஆக்ட்ரெஸா இருக்காங்க.

image

3) எல்லாருக்கும் சமந்தாவோட முதல் படம் விண்ணைத்தாண்டி வருவாயாவும், தெலுங்குல வந்த ye maayaa cheaveனு தான் நினைப்பீங்க. அதான் இல்ல. அவங்க முதல்ல நடிச்ச படம் தமிழ்ல்ல வந்த மாஸ்கோவின் காவேரி. சமந்தாவோட விளம்பரங்கள பாத்து டிரைக்டர், சினிமேட்டோகிராபர் ரவிவர்மன்தான் அவங்கள சினி industryக்கு அறிமுகம் பன்னிருக்காரு. 2010ல் வெளியான உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான செம்மொழி பாட்டிலும் சமந்தா இடம்பெற்றிருப்பாங்க.

4) vtv, ye maaya Chesave படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்து வந்த அவரோட படங்கள் ரசிகர்களை ஈர்க்கல. அப்போ தான் மறுபடியும் கவுதம் மேனன் இயக்கத்துல நீதானே பொன்வசந்தம் படத்துல நடிக்கிற வாய்ப்பு சமந்தாவ தேடி வந்தது. தமிழ், தெலுங்குனு ரெண்டு மொழிலையும் டப்பிங் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

அதன் பயனா ye maaya Chesave படத்துக்கு அறிமுக நாயகி அவார்ட் ஃபிலிம் ஃபேர் சவுத் கொடுத்தது. அதுக்கப்பறம் வந்த நீதானே என் பொன் வசந்தம் படத்துக்காக சிறந்த நாயகி பிரிவுல தமிழ்நாட்டு ஸ்டேட் அவார்டும், ஆந்திராவின் நந்தி அவார்டும், ஃபிலிம் ஃபேர் அவார்டையும் வாங்கியிருக்காங்க.

image

5) சமந்தாவுக்கு ரொம்ப பிடிச்ச நடிகைனா அது இப்பவும் கோலிவுட் குயினா இருக்க த்ரிஷாதானாம். 80ஸ் ஃபேவரேட் ரேவதிதான் சமந்தாவோட இன்ஸ்பிரேஷன். ரேவதி படங்களை பார்த்து கண்ணாடி முன்னாடி நின்னு நடிச்சு பாத்துப்பாங்களாம் சமந்தா.

6) மாடலிங், சினிமாக்கு பிறகு பிரதியுஷா சப்போர்ட் என்ற NGOம் நடத்தி வறாங்க சமந்தா. இதன் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான மருத்துவம் படிப்பு செலவை livelife மருத்துவமனையோட இணைந்து சமந்தா பணியாற்றி வறாங்க. இதுபோக தெலங்கானா அரசோட கைத்தறித்துறைக்கான தூதுவராக இருக்கும் சமந்தா saaki என்ற clothing brand ஓட நிறுவனராகவும் இருக்காங்க.

7)samக்கு ஜப்பான் உணவான சூஷிதான் ரொம்ப பிடிச்ச உணவாம். இவங்களுக்கு பால்கோவானா அத்தனை ப்ரியம். அதுபோக சாக்லேட்டும் சமந்தாவுக்கு ரொம்ப பிடிச்ச லிஸ்ட்ல இருக்காம்.

image

8) son of sathyamurthy படத்துல சர்க்கரை நோயாளியா நடித்திருந்த சமந்தா உண்மையாவே நீரிழிவு நோயால பாதிக்கப்பட்டிருந்தாங்களாம். அதுக்கான சிகிச்சைல இருந்தப்போதுதான் மணிரத்னத்தின் கடலிலும், ஷங்கரின் ஐ படத்திலும் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆகியிருக்கு.

9) எல்லாரும் சமந்தாவ sam இல்லைனா sammuனு கூப்பிடுவததான் கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா சமந்தாவ யசோதானுதான் அழைப்பாங்களாம். இப்படி இருக்கையில் சமந்தாவின் யசோதா என்ற படம் இந்த ஆண்டு வெளிவர இருக்கிறது. 

10) சமந்தாவுக்கு நீளமான முடியை விட ஷார்ட் ஹேர் தான் ரொம்ப பிடித்தமானதாம். mood outல இருந்தா Rhonda Byrne எழுதிய the secret புத்தகம்தான் சமந்தாவின் முதல் தேடல். பணியாளர்களை வைத்து வீட்டு வேலைகளை பார்ப்பதில் சமந்தாவுக்கு விருப்பமே இல்லையாம். இதனால் அவங்க வீட்டுக்கு தேவையானவற்றை அவங்களேதான் வாங்கி அதற்கான வேலையையும் செய்வாங்களாம்.

– ஜனனி கோவிந்தன்

ALSO READ: 

என்னது நெல்சன் யூனிவெர்ஸா? ரஜினியின் ஜெயிலர் பற்றி தெறிக்கும் ட்விட்டர் கருத்துகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.