இந்தியாவின் மோசமான சந்தை வர்த்தகத்தில் ரீடைல் முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் பெரும் பணக்கார முதலீட்டாளர்கள், கோடீஸ்வர முதலீட்டாளர்களும் அதிகளவிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
இதனால் விரைவில் சந்தையில் முதலீட்டுப் போக்கில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது சரி இந்தியாவின் கோடீஸ்வர முதலீட்டாளர்கள் மே மாதம் மட்டும் எவ்வளவு இழந்துள்ளனர் தெரியுமா..?
ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகினாலும் அம்பானிக்கு வெற்றி தான்: எப்படி தெரியுமா?
அமெரிக்கா
அமெரிக்கப் பொருளாதார வரலாற்றில் அந்நாட்டின் மத்திய வங்கி பெடர்ல் ரிசர்வ் கடந்த 28 வருடத்தில் செய்திடாத வகையில் அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைச் சுமார் 0.75 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரிட்டன்
அமெரிக்கா கடந்த 2 மாதத்தில் இரண்டு முறை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில் பிரிட்டன் அரசும் பணவீக்கத்தைக் குறைக்கத் தனது பென்ச்மார்க் வட்டியை 0.25 சதவீதம் அதிகரித்து 1.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள்
இதைத் தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தை, வர்த்தகச் சந்தையில் இருக்கும் முதலீடுகள் பாதுகாப்பான பத்திர முதலீட்டு சந்தைக்குக் கொண்டு செல்ல அன்னிய முதலீட்டாளர்கள் 2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 2.022 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
மேலும் ஜூன் மாதம் 17ஆம் தேதி வரையில் மட்டும் இதுவரை 28,445 கோடி ரூபாய் அளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான ஆதிக்கம் இருக்கும் நிலையில் இந்த அன்னிய முதலீட்டு வெளியேற்றம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது.
மாற்று முதலீட்டுத் திட்டங்கள்
இந்தியாவில் மாற்று முதலீட்டுத் திட்டங்களில் (Alternative Investment Funds) அதிகளவில் முதலீடு செய்யும் அல்ட்ரா ரிச் மற்றும் கோடீஸ்வர முதலீட்டாளர்கள் மே மாதம் மட்டுமே சுமார் 16 சதவீதம் அளவிலான முதலீட்டு இழப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
மலபார் வேல்யூ பண்ட் திட்டம்
இந்நிலையில் AIF பிரிவில் மலபார் வேல்யூ பண்ட் திட்டம் மட்டும் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சுமார் 420 கோடி ரூபாயை இழந்து 15.76 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. இதேபோல் சுனில் சிங்கானியா தலைமையிலான அபாக்கஸ் அசெட் மேனேஜர்ஸ் எமர்ஜிங் ஆப்பர்சுனிட்டிஸ் பண்ட் – 1 திட்டம் மட்டும் சுமார் 10.9 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது.
முக்கியப் பண்டுகள்
இதேபோல் நிப்பான் இந்தியா, Aequitas ஈக்விட்டி பண்ட், Sageone மற்றும் Alchemy போன்ற முன்னணி திட்டங்களும் சரிவை சந்தித்துள்ளது. லாங்க ஒன்லி பிரிவில் இருக்கும் ஒரு AIF திட்டம் கூட லாபத்தில் இல்லை என்பது முக்கியமான தகவல்.
Crorepati investors lose up to 16% in May; AIF data shocks market analyst
Crorepati investors lose up to 16% in May; AIF data shocks market analyst இந்திய பணக்காரர்களைப் பதம் பார்த்த மே மாதம்.. என்ன நடந்தது தெரியுமா..? Crorepati investors lose up to 16% in May; AIF data shocks market analyst இந்திய பணக்காரர்களைப் பதம் பார்த்த மே மாதம்.. என்ன நடந்தது தெரியுமா..?