இலங்கையைப் போல் பாகிஸ்தானும் சீனாவின் கடன் வலையில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லாகூர் பசுமை ரயில் திட்டத்திற்காக சீனாவிடம் இருந்து 55.6 மில்லியன் டாலர் கடனை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ள நிலையில், இந்த கடன் தொகையை 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் தவறாமல் திருப்பி செலுத்துமாறு சீனா நெருக்கடி கொடுத்து வருகிறது.
பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த மார்ச் மாத நிலவரப்படி, 2.915 பில்லியனாக சரிந்துள்ள நிலையில் சீனா கொடுத்துவரும் இந்த நெருக்கடி பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.