உக்ரைன் போர் உலகம் முழுவதும் பல்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஜேர்மனிக்கு ஒரு நல்ல விடயம் நடந்துள்ளது.
ஆம், உக்ரைன் போரால் ஜேர்மனி மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கிடையிலான உறவு வலுப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் நல்ல உறவு ஏற்பட்டுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளாக, ஈராக் போர், உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுகள், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தொல்லைகள் என ஜேர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் உரசல்கள் இருந்துகொண்டே இருந்தன. பின்னர் புதிதாக அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜோ பைடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சரி செய்வதில் ஆர்வம் காட்டினார்.
இப்போது உக்ரைன் போர் அந்த நிலைமையை மேலும் மேம்படுத்தியிருக்கிறது.
இன்னொரு பக்கம், அமெரிக்கா பெரிதும் எதிர்த்த ரஷ்யாவின் Nord Stream 2 எரிவாயுத் திட்டத்தை ஜேர்மனி கைவிட்டது அமெரிக்காவுக்கு மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
சமீபத்திய ஆய்வு ஒன்று, ஜேர்மன் அமெரிக்க உறவை, ஜேர்மன் மற்றும் அமெரிக்க மக்கள் பெரிதும் வரவேற்கிறார்கள் என்பதைக் காட்டியுள்ளது.
ஆக மொத்தத்தில், ஜேர்மனிக்கும் சரி, ரஷ்யாவுக்கும் சரி, இந்த உறவால் இலாபம்தான். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுருவல் அதன் மேற்கத்திய கூட்டாளிகளை ஒன்றிணைத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.