உலகில் அதிக பிட்காயின் வைத்துள்ளது யார் தெரியுமா..?!

சில மாதங்கள் முன்பு வரையில் நாணய மதிப்பில் ஏற்படும் சரிவை சமாளிக்க வேண்டும் என்பதற்காகப் பல முன்னணி மற்றும் பங்குச்சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் பிட்காயின் உட்படப் பல கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தனர்.

இது எலான் மஸ்க்-ன் டெஸ்லா உட்படப் பல நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் பயன்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுப் பாதிப்பு, பணவீக்கம், அரசின் முடிவுகள், ரஷ்யா – உக்ரைன் போர் ஆகியவற்றின் மூலம் பங்குச்சந்தையைப் போல் கிரிப்டோகரன்சியும் மிகப்பெரிய சரிவை பதிவு செய்துள்ளது.

ஆனாலும் பல முன்னணி நிறுவனங்கள் அதிகப்படியான பிட்காயின்களை வைத்துள்ளது, அப்படி அதிகம் வைத்துள்ள நிறுவனங்கள் எது..?

பிட்காயின்

2020 மற்றும் 2021ஆம் ஆண்டில் பிட்காயின் விலை தொடர்ந்து அதிகரித்துப் புதிய உச்சத்தை எட்டி வந்த காரணத்தால் பல முன்னணி நிறுவனங்கள் பிட்காயின் முதலீட்டை தங்களது நிறுவனத்தின் நிதி அறிக்கையில் முக்கியச் சொத்தாகவே கணக்கு கட்டும் அளவிற்கு முதலீடு செய்து சேமித்து வைத்தது.

 27 நிறுவனங்கள்

27 நிறுவனங்கள்

காயின்ஜீக்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் சுமார் 27 நிறுவனங்கள் 2,25,413 பிட்காயின்களை வைத்துள்ளது. இது சந்தையில் புழக்கத்தில் உள்ள மொத்த பிட்காயின்களில் கிட்டதட்ட 1.18 சதவீதமாகும். மேலும் இந்த 1.18 சதவீத பிட்காயின் மதிப்பு 4.6 பில்லியன் டாலர் மதிப்பிலானது.

மைக்ரோ ஸ்டாட்டெர்ஜி
 

மைக்ரோ ஸ்டாட்டெர்ஜி

அமெரிக்காவின் மைக்ரோ ஸ்டாட்டெர்ஜி நிறுவனம் மட்டும் சுமார் 1,29,218 பிட்காயின்-களை வைத்துள்ளது, ஜூன் 17ஆம் தேதி கணக்கின் படி மைக்ரோ ஸ்டாட்டெர்ஜி சுமார் 2.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயின்களை வைத்துள்ளது.

 டாப் 5

டாப் 5

இதைத் தொடர்ந்து எலான் மஸ்க்-ன் டெஸ்லா 48000 பிட்காயின்களை வைத்துள்ளது, கனடா நாட்டைச் சேர்ந்த Galaxy Digital Holdings நிறுவனம் 16402 பிட்காயின்களை வைத்துள்ளது. Square இன்க் நிறுவனம் 8,027 பிட்காயின்களை வைத்துள்ளது, Marathon patent நிறுவனம் 4813 பிட்காயின்களை வைத்துள்ளது. இவை அனைத்துமே பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்டு உள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Galaxy Digital நிறுவனம்

Galaxy Digital நிறுவனம்

ஜனவரி 2018ஆம் ஆண்டுப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான Galaxy Digital Holdings நிறுவனம் தான் முதன்முதலில் கிரிப்டோவில் முதலீடு செய்யும் முயற்சியைத் துவங்கியது. இதனைத் தொடர்ந்த பல நிறுவனங்கள் இப்பிரிவு முதலீட்டில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனங்களும், அரசும்

தனியார் நிறுவனங்களும், அரசும்

இதேபோல் தனியார் நிறுவனங்கள் மொத்தம் 1,74,068 பிட்காயின்களை வைத்துள்ளது, இது மொத்த கையிருப்பில் 0.829 சதவீதமாகும். இதில் சீன நிறுவனமான Block.one நிறுவனம் சுமார் 1,40,000 பிட்காயின்களை வைத்துள்ளது, இது மொத்த பிட்காயினில் 0.667 சதவீதமாகும். இதேபோல் உலகில் பல நாடுகள் 2,59,870 பிட்காயின்களை வைத்துள்ளது, இது மொத்த இருப்பில் 1.237% ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Who owns the most bitcoin in the world? Check this china company

Who owns the most bitcoin in the world? Check this china company Who owns the most bitcoin? உலகில் அதிகப் பிட்காயின் வைத்துள்ளது யார் தெரியுமா..?!

Story first published: Saturday, June 18, 2022, 11:47 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.