ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளால் ஐரோப்பாவுக்குத்தான் பெரிய நஷ்டம் என்று கூறியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
செயின்ட் பீற்றர்ஸ்பர்கில் நடைபெறும் பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றிய புடின், உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகள், பைத்தியக்காரத்தனமானவை மற்றும் யோசிக்காமல் எடுக்கப்பட்டவை என்றார்.
அந்த தடைகளால் தடை விதித்தவர்களுக்குத்தான் அதிக ஆபத்து என்றார் அவர்.
ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடைகளால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 400 பில்லியன் டொலர்கள் வரை இழப்பு ஏற்படும் என்றார் புடின்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள புடின், மக்களுடைய உண்மையான விருப்பங்கள் ஓரங்கட்டப்படுவதாக தெரிவித்தார். ஆனால், அவர் எதனால் அப்படிச் சொல்கிறார் என்பதை புடின் விவரிக்கவில்லை.
ஆனால், புடின் அப்படிக் கூறியிருக்க, ரஷ்ய அதிகாரிகளே அதற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். ரஷ்ய பொருளாதாரம் தடைகளால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள், ரஷ்யா 2021இல் இருந்த நிலைக்குத் திரும்ப பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.