தமிழகம் முழுவதும் எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் 4வது நாளாக வருமானவரி சோதனை நடத்தி வருகிறது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எம்ஜிஎம் குழுமம் சொந்தமாக ஹோட்டல்கள், இறக்குமதி, ஏற்றுமதி தொழில், ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு பூங்கா, மதுபான தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகிறது.
இந்நிறுவனம் வருமானத்தை குறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு எம்.ஜி.எம். குழுமத்துக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை தொடங்கியது. சென்னை, விழுப்புரம், தூத்துக்குடி, வேளாங்கண்ணி என சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றார். சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கிடைத்துள்ள முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.