சமீபத்தில் அடுத்த ஆண்டு ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நடைபெற்ற நிலையில் அந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனம் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென அமேசான், ரிலையன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் விலகியதை அடுத்து டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை பெறாவிட்டாலும் இதைவிட மிகப் பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
கூகுள், அமேசான், பேஸ்புக் ஆகியவை அச்சுறுத்தல் தரும் நிறுவனங்கள்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை
அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற ரிலையன்ஸ், அமேசான் உள்பட பல நிறுவனங்கள் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அமேசான், ரிலையன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டன.
போட்டியில் இருந்து விலகல்
அடுத்த 5 ஆண்டுகளில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றினால் விளம்பர வருவாய் மிகப்பெரிய அளவில் கிடைக்கும் என்று திட்டமிட்ட நிலையில் திடீரென இந்த இரண்டு நிறுவனங்களும் போட்டியிலிருந்து விலகியது மற்ற நிறுவனங்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது.
டிஜிட்டல் உரிமை
ஆனால் அதே நேரத்தில் வயாக்ரா 18, அம்பானி-பாராமவுண்ட் ஆகிய நிறுவனங்கள் ஐபிஎல் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியது. இருப்பினும் ரிலையன்ஸ் நிறுவனம் டிவி ஒளிபரப்பு உரிமை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் பின்வாங்கியது ஏன் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
இங்குதான் அம்பானியின் புத்திசாலித்தனத்தை அனைவரும் பாராட்டுகின்றனர். விரைவில் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் வரவிருக்கும் நிலையில் அதில் மிகப் பெரிய தொகையை ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.
5ஜி அலைக்கற்றை
5ஜி அலைக்கற்றை ஏலத்தை வெற்றிகரமாக ரிலையன்ஸ் நிறுவனம் முடித்து விட்டால் அதன்பின் ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க்கை தான் தேர்வு செய்வார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
ஜியோ
கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் ஜியோ நிறுவனம், 5ஜி சேவையை வழங்குவதன் மூலம் மிகப்பெரிய லாபத்தை அடைய திட்டமிட்டுள்ளது. 5ஜி தொழில்நுட்பம் மூலம் ஐபிஎல் போட்டிகளை ஏராளமானோர் பார்க்க ஆரம்பித்தால் அதற்கான கட்டணத்தின் மூலம் ஜியோவுக்கு வருமானம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோவின் கணக்கு
இந்த வருமானம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஏலத்தில் எடுத்து அதில் கிடைக்கும் விளம்பர வருவாயை விட அதிகமாக இருக்கும் என்றும் ஜியோ நிறுவனம் கணக்குப் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அம்பானியின் கணக்கு
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 90 கோடி பேர் இண்டர்நெட்டை பயன்படுத்துவார்கள் என்றும் அதில் பெரும்பாலானோர் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 5ஜி மூலம் மிகப் பெரிய ஆதாயம் அடையலாம் என்று அம்பானிக்கு கணக்கு போட்டதால் தான் ஐபிஎல் ஏலத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
Why Reliance out from IPL Media rights auction
Why Reliance out from IPL Media rights auction | ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகினாலும் அம்பானிக்கு வெற்றி தான்: எப்படி தெரியுமா?