நியூயார்க்:பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கியை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா – அமெரிக்காவின் கூட்டு பரிந்துரைக்கு, சீனா கடைசி நிமிடத்தில் முட்டுக்கட்டை போட்டது.
கடந்த 2008 நவ., 26ல் மஹாராஷ்டிராவின் மும்பை நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, லஷ்கர் பயங்கரவாத குழுவின் தலைவர் ஹபீஸ் சயீத் மூளையாகச் செயல்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த இவரது உறவினரான அப்துல் ரஹ்மான் மக்கியை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்காஅறிவித்துள்ளது.
இந்நிலையில், அவரை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, இந்தியா – அமெரிக்கா கூட்டு பரிந்துரையை தாக்கல் செய்தது. இந்தப் பரிந்துரை, பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.
இந்தப் பரிந்துரைக்கு, சீனா கடைசி நிமிடத்தில் முட்டுக்கட்டை போட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பலரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முந்தைய முயற்சிகளின் போதும், சீனா இதுபோல கடைசி நிமிட முட்டுக்கட்டை போட்டுள்ளது.
சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க் கப்பலை அந்நாட்டு ராணுவம் நேற்று அறிமுகம் செய்தது. ‘புஜியான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன விமானம் தாங்கி போர்க் கப்பலை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. இது, ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. ஏற்கனவே, 2012 மற்றும் 2019ல் இரு விமானம் தாங்கி போர்க் கப்பல்களை சீனா உருவாக்கி உள்ளது.
Advertisement