இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகச் சந்தைகள் அதிகளவிலான தடுமாற்றத்தில் இருக்கும் நிலையில் ரியல் எஸ்டேட் மட்டுமே தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளது.
இதனால் அனைத்து பெரும் பணக்காரர்களும் தற்போது ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்த வகையில் மும்பையின் முக்கியமான பகுதியில் ஒரு சதுரடி 73,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
நீங்க பாமாயில் தாங்க, நாங்க கோதுமை தருகிறோம்: இந்தோனேஷியாவிடம் இந்தியா பண்டமாற்று பேச்சுவார்த்தை!
பி.ஆர்.சோப்ரா
பழம்பெரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான பல்தேவ் ராஜ் சோப்ரா அல்லது பி.ஆர்.சோப்ரா-வின் மும்பை நகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான ஜூஹு-வில் உள்ள வீட்டை கிட்டத்தட்ட ரூ.183 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
ரஹேஜா கார்ப்
பிரபல ரியல் எஸ்டேட் டெவலப்பர் ஆன கே ரஹேஜா கார்ப் பிஆர்.சோப்ரா-வின் 25,000 சதுர அடி கொண்ட அக்குடும்ப வீட்டை வாங்கியுள்ளது. மறைந்த பிஆர் சோப்ராவின் மகனான ரவி சோப்ராவின் மனைவி ரேணு ரவி சோப்ரா கட்டுப்பாட்டில் தான் இந்த மாபெரும் வீடு உள்ளது.
ஒரு சதுரடி 73200 ரூபாய்
இந்நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு பிஆர் சோப்ராவின் மருமகளிடமிருந்து இந்த வீட்டை ரஹேஜா கார்ப் வாங்கப்பட்டுள்ளது. 25000 சதுரடி வீட்டை 183 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில் ஒரு சதுரடி 73200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
183 கோடி ரூபாய் விலை
இந்த 25000 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள வீட்டு மற்றும் நிலத்தைச் சுமார் ரூ.182.76 கோடி செலுத்தப்பட்டுள்ளதாகவும், பத்திர பதிவிற்காகக் கிட்டத்தட்ட ரூ.11 கோடி முத்திரை கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆடம்பர குடியிருப்புகள்
ரஹேஜா கார்ப் மும்பை உட்பட நாட்டின் பல பகுதிகளில் பல ஆடம்பர கட்டிடங்களைக் கட்டி வரும் நிலையில் பி.ஆர்.சோப்ரா வீடு அமைந்துள்ள பகுதியில் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களைக் கவரும் வண்ணம் ஆடம்பர குடியிருப்புகளைக் கட்ட திட்டமிட்டு உள்ளது.
யார் இந்தப் பி.ஆர்.சோப்ரா..?
நயா தௌர் (1957), சாதனா (1958), கானூன் (1961), கும்ரா (1963), ஹம்ராஸ் (1967), இன்சாஃப் கா தராசு (1980), நிக்காஹ் (1982), அவாம் (1987) உள்ளிட்ட சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை இயக்கிய பெருமை கொண்டவர் மறைந்த புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான பி.ஆர்.சோப்ரா.
பி.ஆர்.சோப்ரா விருதுகள்
அவர் 1988 ஆம் ஆண்டு இந்திய தொலைக்காட்சியைப் புரட்டிப்போட்ட மகாபாரதக் காவியத்தைத் தயாரித்து வரலாற்றை உருவாக்கினார். பி.ஆர்.சோப்ராவுக்கு 1998 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிக உயரிய சினிமா விருதான தாதாசாகே பால்கே விருதும், 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.
இந்திய ரியல் எஸ்டேட் துறை
சொந்த ஊரில் பணியாற்றி வந்த பலர் தற்போது தங்கள் பணிபுரியும் பெரு நகரங்களுக்கு வந்துள்ள வேளையில் புதிய வீடுகளுக்கான டிமாண்ட் அதிகரித்து உள்ளது, இதேவேளையில் வட்டியும் அதிகரித்து உள்ள காரணத்தால் மந்தநிலையும் உருவாகியுள்ளது. இப்படி இக்காட்டான சூழ்நிலைக்கு மத்தியில் இந்திய ரியல் எஸ்டேட் துறை இருந்தாலும் பெரும் விற்பனைகளைத் தொடர்ந்து நடந்து தான் வருகிறது.
Famous producer BR Chopra’s massive 25,000 sq ft Juhu bungalow sold for Rs 183 cr to K Raheja Corp
Famous producer BR Chopra’s massive 25,000 sq ft Juhu bungalow sold for Rs 183 cr to K Raheja Corp ஒரு சதுரடி விலை 73,200 ரூபாய்.. அப்படியே தலைசுத்திடுச்சு.. எந்த ஊரில் தெரியுமா..?