குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ள எதிர்கட்சிகள் இதுதொடர்பாக வருகிற 21 ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்துகின்றன.
ஜம்மு-காஷ்மீர் தற்போது இக்கட்டான சூழலை கடந்துக் கொண்டிருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட தாம் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.