குழந்தையின்மைப் பிரச்னை
உலக அளவில் கருத்தரிக்கும் வயதில் இருக்கும் தம்பதிகளில் குழந்தையின்மைப் பிரச்னை 15% பேரிடம் காணப்படுகிறது. குழந்தையின்மை பாதிப்பை முதல் நிலை, இரண்டாம் நிலை என பிரிக்கலாம். முதல்நிலை குழந்தையின்மை பாதிப்பு என்பது தம்பதிக்கு இதுவரை கருத்தரிப்பு நிகழவே இல்லை என்பதைக் குறிக்கும். ஏற்கெனவே கருத்தரித்து அடுத்ததாக கருத்தரிக்க முடியாத நிலையை இரண்டாம் நிலை குழந்தையின்மை பாதிப்பு என்கிறோம்.
உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி இந்தியாவில் நிலவும் குழந்தையின்மையில் 3.9% முதல் 16.8% பேருக்கு முதல்நிலை குழந்தையின்மை பாதிப்பு காணப்படுகிறது. உலக அளவிலும் பெரும்பாலான தம்பதிகள் மத்தியில் காணப்படுவது இந்த முதல் நிலை குழந்தையின்மை பிரச்னைதான்.
அவள் விகடன் வெபினார்
குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தையின்மை குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக அவள் விகடன் மற்றும் Oasis Fertility மருத்துவமனை இணைந்து ‘குழந்தையின்மை… தம்பதிகளுக்கான A – Z தீர்வுகள்’ என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஜூன் 25-ம் தேதி (சனிக்கிழமை) ஆன்லைனில் நடத்தவுள்ளது.
Oasis Fertility மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் வி. அபர்ணா நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளார். குழந்தையின்மை பிரச்னைக்கான காரணங்கள், தீர்வுகள், சிகிச்சை முறைகள் என தம்பதிகளுக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கவுள்ளார்.
இதுதவிர, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் தனிப்பட்ட சந்தேகங்களுக்கும் தீர்வளிப்பார். ஜூன் 25-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை ஆன்லைனில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.