உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், அமேசான் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்களை நிதித் துறையில் ஈடுபடுவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் எச்சரித்துள்ளார்.
வங்கிகள் மட்டுமின்றி தற்போது தனியார் நிதி நிறுவனங்களும் பண பரிவர்த்தனை சேவைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக கூகுள், பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப், அமேசான் ஆகிய நிறுவனங்களின் செயலிகளில் பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.
ஹெலிகாப்டர் வாங்கனும்.. 6 கோடி கடன் வேணும்.. வங்கி அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த விவசாயி..!
அமேசான் கூகுள் பேஸ்புக்
இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் பேசியபோது, ‘பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகியவை நிதித் துறையில் ஈடுபடுவது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அச்சுறுத்தல்
உலகின் பெரிய நிறுவனங்களின் போட்டி மற்றும் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்றும் இந்த நிறுவனங்கள் நிதி சேவையில் ஈடுபட்டு வருவதால் தொடர்பு அச்சுறுத்தலாக இருந்தது என்றும் இவற்றை முறையாக கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி சேவை
இணைய வர்த்தகம் செய்யும் அமேசான் நிறுவனம், தேடு பொறி நிறுவனமான கூகுள் மற்றும் சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் ஆகியவை உலக அளவில் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் செய்து வருவதோடு இந்தியாவில் நிதி சேவையிலும் ஈடுபட்டு வருகின்றன.
கண்காணிப்பு
இந்த நிறுவனங்கள் தனியாகவோ அல்லது ஏதேனும் நிறுவனத்துடன் இணைந்தோ இந்த நிதிச் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. புதிய தொழில்நுட்பம் மற்றும் அணுகுமுறை மூலம் செயல்படுவதால் இவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு
இந்த நிறுவனத்தில் பண பரிமாற்றம் செய்பவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளதால் அவற்றை முறையாகக் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Amazon, Google and Facebook are financial threat companies: RBI warns
Amazon, Google and Facebook are financial threat companies: RBI warns | கூகுள், அமேசான், பேஸ்புக் ஆகியவை அச்சுறுத்தல் தரும் நிறுவனங்கள்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை