திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த வீரபுரத்தில் திருமணமான ஐந்தே நாட்களில் புதுமாப்பிள்ளை வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 13ஆம் தேதி முத்தரசன் – அரவிந்தியா தம்பதிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், மாமனார் வீட்டு விருந்தில் கலந்து கொண்டுள்ளார். நேற்றிரவு அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, முத்தரசன் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார் மாமனார் ரவிசந்திரனை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.