பொதுவாக பெருங்காயத்திற்கு என்று சமையலில் தனிப்பட்ட இடம் எப்போதும் உண்டு.
மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது பெருங்காயம்.
பெருங்காயம் கார நெடியுடன் கூடிய கார்ப்பு சுவை கொண்டதாகும். சுவையும் மணமும் மட்டுமல்ல, நமது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். ,இதனால் தான் இதனை உணவில் கட்டாயம் சேர்க்கப்படுகின்றது.
அந்தவகையில் சமையலில் பெருங்காயம் சேர்ப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- அசிட் ரிஃப்ளக்ஸை பெருங்காயம் தடுக்கிறது. உப்பசம், வாய்வு மற்றும் எரிச்சல் கொண்ட குடல் இயக்கங்களைக் குறைக்க பழங்காலத்திலிருந்தே பெருங்காயம் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- பெருங்காயத்தில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அசாதாரண பிடிப்புகள் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளிட்டவற்றில் இருந்து விரைவான நிவாரணம் கிடைக்கும்
- பெருங்காயத்தில் உள்ள கூமரின் என்ற வேதிப்பொருள் ரத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து, அதனை மெல்லியதாக மாற்ற உதவுகிறது. அதன் இந்த பண்பு ரத்த ஓட்டத்தை சீராக செய்து வயிற்று வலியை குறைக்க உதவுகிறது.
- இன்சுலின் சுரக்க கணைய செல்களை பெருங்காயம் தூண்டுகிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம். உணவுகளில் பெருங்காயம் சேர்ப்பதன் சில குறிப்பிட்ட நன்மைகள் மேலே சுட்டிக்காட்டப்பட்டாலும் கூட ஆஸ்துமா நோயாளிகளுக்கும் பெருங்காயம் உதவுகிறது.
- மாதவிடாய் சிக்கல்கள் தவிர கர்ப்பை பிரச்சனைகள், பாலுணர்வை தூண்டுதல் போன்ற விஷயங்களுக்கும் பெருங்காயம் அருமருந்தாக செயல்படுகிறது.
- பெருங்காயம் முகப்பருவைக் குறைக்க உதவும். அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு உற்பத்தியை குறைக்க செயல்படுகின்றன. அதேசமயம், அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பருக்கள் மற்றும் ரேஷஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது.