நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா, ஜிண்டால் ஆகியோரை கைது செய்யவேண்டும் என்று கோரி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் வட மாநிலத்தில் வன்முறை வெடித்தது. நுபுர் ஷர்மா மீது மும்பை, புனே, டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வளைகுடா நாடுகள் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதையடுத்து நுபுர் ஷர்மாவை பாஜக, சஸ்பெண்ட் செய்தது. நுபுர் ஷர்மாவிடம் விசாரிப்பதற்காக மும்பை போலீஸார் டெல்லி சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.
மும்பை போலீஸார் டெல்லியில் 5 நாள்களாக முகாமிட்டு நுபுர் ஷர்மாவை தேடி வருகின்றனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை, தலைமறைவாகிவிட்டார் என்கிறார்கள். ஏற்கனவே நுபுர் ஷர்மாவுக்கு தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருந்தது. அதோடு போலீஸ் வழக்குகளும் இருந்ததால் அவர் தலைமறைவாகிவிட்டார் என்கிறார்கள். நுபுர் சர்மா தான் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்தை திரும்ப பெற்றுக்கொண்டார். இதே போன்று இவ்விவகாரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜிண்டாலும் தலைமறைவாகிவிட்டார். அவரும் மிரட்டல் காரணமாக தனது குடும்பத்தை டெல்லியில் இருந்து யாருக்கும் தெரியாத இடத்திற்கு இடமாற்றம் செய்துவிட்டார் எனக் கூறப்படுகிறது. யாரும் தனது குடும்பம் இருக்கும் இடத்தை யாருக்கும் பகிரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் நபிகள் நாயகம் சர்ச்சை அடங்கும் முன்பாக அக்னிபத் சர்ச்சை தொடங்கிவிட்டது குறிப்பிடதக்கது.