சாய்பல்லவியின் கருத்துக்கு விஜயசாந்தி கண்டனம்

நடிகை சாய்பல்லவி நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள விராட பருவம் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாய்பல்லவி மதம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இறைச்சி விற்ற இஸ்லாமியர்களை கொள்வதும் மத வன்முறை தான் என்று கூறியிருந்தார்.

இவரது இந்த கருத்துக்கு மத உணர்வாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இவரது கருத்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி சாய்பல்லவி மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சாய் பல்லவியின் தைரியமான கருத்தை பலரும் வரவேற்று பாராட்டும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பிரபல சீனியர் நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான விஜயசாந்தி சாய்பல்லவியின் கருத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜயசாந்தி கூறுகையில், “சாய்பல்லவி தான் கூறிய கருத்துக்களை ஒரு நிமிடம் நின்று நிதானித்து பின்னால் திரும்பி பார்த்தால் இரண்டிற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பது தெரியவரும். ஒரு தாய் தனது மகனை அடித்து கண்டிப்பதும், ஒரு திருடனை அடித்து கண்டிப்பதும் இரண்டும் ஒன்றாகி விடுமா..? இதுபோன்ற சென்சிட்டிவான மத விஷயங்களில் முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் கருத்துக்களைக் கூறுவதைவிட சற்று அதை விட்டு ஒதுங்கியே நின்று விட வேண்டும் என்று கூறியுள்ளார் அது மட்டுமல்ல விராட பருவம் பட தயாரிப்பாளர்கள் இந்த சென்சிடிவான மத உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களை வைத்து தங்களது படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்த நினைக்கிறார்கள் என்று தான் தெரிகிறது” என்றும் சாடியுள்ளார் விஜயசாந்தி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.