சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டல அளவில் குழுவை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மேயர் திருமதி ஆர்.பிரியா தலைமையில்று செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று அண்ணாநகர் மண்டலம், வார்டு-95க்குட்பட்ட அகத்தியர் நகர் டிவிஎஸ் கால்வாயினை மேயர் திருமதி பிரியா, ஆணையாளர் கிரன்பேடியுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர், மண்டலக்குழுத் தலைவர் .கூ.பி.ஜெயின், மத்திய வட்டார துணை ஆணையாளர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டல அளவிலான குழுவை (தீவிர பறக்கும் படை) சென்னை மாநகராட்சி அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள், கட்டட கழிவுகள், மற்றும் விதிகளுக்குப் புறம்பான கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க மண்டல அளவில் முதன்மைப் பொறியாளர் தலைமையில் குழுவை மாநகராட்சி அமைத்துள்ளது.
இந்த குழுவில் உதவி முதன்மைப் பொறியாளர், உதவி அல்லது இளநிலைப் பொறியாளர், மின்சாரத் துறையின் உதவி பொறியாளர், சாலைப் பணியாளர்கள் மற்றும் மலேரியா பணியாளர்களை இருப்பார்கள். மேலும் ஒரு குழுவில் ஒரு லாரி, ஜேசிபி, ஒரு வாகனம் இருக்கும்.
இந்த குழுவினர் ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தீவிர பறக்கும் படை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை ஒவ்வொரு சனிக்கிழமையும் தலைமைப் பொறியாளரிடம் குழு ஆணையர் இடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.