ஜனாதிபதி, பிரதமருக்கு 1000 கிலோ மாம்பழம்| Dinamalar

புதுடில்லி : நம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு, வங்கதேச பிரதமர் 1000 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பியுள்ளார்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, நம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு 1000 கிலோ ‘அம்ரபலி’ ரக மாம்பழங்களை பரிசாக அனுப்பியுள்ளார். கடந்த ஆண்டும், ஜனாதிபதி, பிரதமர், மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் மாநில முதல்வர்கள் ஆகியோருக்கு ஷேக் ஹசீனா மாம்பழங்கள் அனுப்பியிருந்தார். இந்த தகவலை புதுடில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.