இஸ்லாமிய நாட்காட்டியின்படி இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை ஜூலை 7 ஆம் தேதி தொடங்குகிறது.
அன்றைய தினம் மெக்கா மதினா ஆகிய இரண்டு புனித நகரங்களுக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு கோவிட் வழிகாட்டு நெறிகள், பயணத் திட்டங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம்அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் சுமார் 20 லட்சம் முஸ்லீம்கள்இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதன் மூலம் ஆண்டுதோறும் சவூதி அரேபியா அரசுக்கு 12 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது. கடந்த ஆண்டில் கோவிட் காரணமாக 60 ஆயிரம் பயணிகளுக்கு மட்டுமே ஹஜ் செல்ல அனுமதி கிடைத்தது.