டிசிஎஸ்-ல் கொடிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. ‘இவர்’களுக்கு மட்டும் ஜாக்பாட்..!

உலகளவில் டிஜிட்டல் சேவைகளும், தொழில்நுட்ப சேவைகளுக்கும் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் நிவையில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதிகப்படியான வர்த்தகத்தை பெற்று வருகிறது. இதே சமாளிக்க அதிகளவிலான ஊழியர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில் டாடா குழுமத்தின் பணம் காய்க்கும் மரமாக விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இந்திய பணக்காரர்களை பதம் பார்த்த மே மாதம்.. என்ன நடந்தது தெரியுமா..?

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

பங்குச்சந்தை சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அதன் தற்போதைய TCS BPS பணியமர்த்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக கலை, வணிகம் மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற தயாராகியுள்ளது.

பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள்

பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அதிகாரப்பூர்வ பணியமர்த்தல் பக்கத்தின்படி, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் பணியமர்த்தல் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்ட்ஸ், காமர்ஸ், சயின்ஸ்
 

ஆர்ட்ஸ், காமர்ஸ், சயின்ஸ்

“2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற (year of passing) ஆர்ட்ஸ், காமர்ஸ் மற்றும் சயின்ஸ் பட்ட படிப்பில் சேர்ச்சி பெற்றவர்களுக்க் என டிசிஎஸ் பிரத்யேகமாக வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.” என்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது.

முக்கிய பிரிவுகள்

முக்கிய பிரிவுகள்

மேலும் தற்போது தேர்வு செய்யப்படும் பட்டதாரிகளில் சிறப்பான செயல்திறன் கொண்டவர்கள் நிறுவனத்தின் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் பணியாற்ற உள்ளனர் என டிசிஎஸ் அறிவித்துள்ளது.

3 பிரிவுகள்

3 பிரிவுகள்

இதில் அறிவாற்றல் வணிக செயல்பாடுகள் (CBO), வங்கி மற்றும் நிதி சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) மற்றும் லைப் சயின்ஸ் ஆகியவை அடங்கும். டிசிஎஸ் நிறுவனத்தின் வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் BPS சேவை தளத்தை மேம்படுத்துவதில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகிறது.

இணையதளம்

இணையதளம்

மேலும் டிசிஎஸ் நிறுவனத்தின் பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும் 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொழில் வளர்ச்சியைப் பெருக்கும் பல்வேறு செழுமைப்படுத்தும் பணிகளில் பணியமர்த்தப்படலாம் என்று நிறுவனம் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. விண்ணப்பம் செய்ய TCS NextStep இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TCS Hiring massive number of graduates in 2022; check who are eligible

TCS Hiring massive number of graduates in 2022; check who are eligible டிசிஎஸ்-ல் கொடிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. ‘இவர்’களுக்கு மட்டும் ஜாக்பாட்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.