லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் மூன்று வாரங்களை கடந்து திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. படம் வெளியானபோது மக்களிடையே இருந்த அதே வைப், 3 வாரங்களுக்கு பிறகும் தொடர்கிறது.
சமீபத்திய தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரியல் ஹிட் என ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை சினிமா தரப்பில் சிலாகிக்கின்றனர். இந்த நிலையில் விக்ரம் பட சக்சஸை கொண்டாடும் வகையில் கோயமுத்தூரில் நேற்று விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவருக்கும் விருந்து வைத்து அசத்தியுள்ளார்.
விருந்தில் பங்கேற்றிருந்த சென்னை குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் கவுதமன், புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து “லோகி ஸ்டைலில் பலமான விருந்து வைக்கப்பட்டிருக்கிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயின் நிறுவனங்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

#Loki style balamana virundhu for theatre owners / distributors / press media for #VikramRoaringSuccess !!! Whattah feast was that

Thank You @RKFI & @RedGiantMovies_ #VikramSuccessMeet pic.twitter.com/EQT9HqW0OM
— Rakesh Gowthaman (@VettriTheatres) June 17, 2022

இதுபோக, சக்சஸ் மீட் விருந்துக்கான மெனுவையும் ராகேஷ் கவுதமன் பகிர்ந்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், விக்ரம் பட அறிவிப்பின்போது பிரியாணி விருந்து வைக்கும் டீசரில் ஆரம்பிக்கலாமா என தொடங்கி பிரியாணியிலேயே முடிந்திருக்கிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
ALSO READ: