அமெரிக்காவில் 1909ல் வாஷிங்டனின் ‘சொனாரா லுாயிஸ்’ என்ற இளம்பெண், முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். இவரது தாய், தன் ஆறாவது பிரசவத்தின் போது மரணமடைந்தார். தந்தை வில்லியம், ஆறு குழந்தைகளை சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இதுதான் இத்தினத்தை கொண்டாடும் எண்ணத்தை அவருக்கு துாண்டியது. இதையடுத்து தந்தையின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஜூன் மூன்றாவது ஞாயிறு (ஜூன் 19) உலக தந்தையர் தினமாக கடைபிடிக்கப் படுகிறது.
இந்தியா உள்பட 52 நாடுகளில் இதே தேதியில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்வதுடன், கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தந்தையிடம் குழந்தைகளுக்கும் பாசம் எப்போதும் குறைந்து போய்விடுவதில்லை. குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த தந்தையர்களுக்கும், குடும்பத்துக்காக கடைசி வரை உழைக்கும் அன்பு நிறைந்த தந்தையர் தின வாழ்த்துகள்.
அமெரிக்காவில் 1909ல் வாஷிங்டனின் ‘சொனாரா லுாயிஸ்’ என்ற இளம்பெண், முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். இவரது தாய், தன் ஆறாவது பிரசவத்தின் போது மரணமடைந்தார்.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.